Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
81 : 5

وَلَوْ كَانُوْا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالنَّبِیِّ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِ مَا اتَّخَذُوْهُمْ اَوْلِیَآءَ وَلٰكِنَّ كَثِیْرًا مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟

5.81. இந்த யூதர்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டிருந்தால் நம்பிக்கையாளர்களை விடுத்து இணைவைப்பாளர்களை நேசிப்பவர்களாகவும் அவர்களின் பக்கம் சாய்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பாளர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த யூதர்களில் அதிகமானோர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவது அவனையும் விசுவாசிகளையும் நேசித்தல் ஆகியவற்றை விட்டும் வெளியேறியவர்களே. info
التفاسير:
Benefits of the verses in this page:
• ترك الأمر بالمعروف والنهي عن المنكر موجب لِلَّعْنِ والطرد من رحمة الله تعالى.
1. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதை விட்டு விடுவது அல்லாஹ்வின் சாபத்திற்கும் அவனது அருளை விட்டும் தூரமாக்கப்படுவதற்கும் அவசியம் இட்டுச்செல்வதாகும். info

• من علامات الإيمان: الحب في الله والبغض في الله.
2. அல்லாஹ்வுக்காக நேசம்கொள்வதும் அல்லாஹ்வுக்காக பகைமை பாராட்டுவதும் ஈமானின் அடையாளங்களாகும். info

• موالاة أعداء الله توجب غضب الله عز وجل على فاعلها.
3. அல்லாஹ்வின் எதிரிகளுடன் நேசம்கொள்பவர் மீது அல்லாஹ்வின் கோபம் விதியாகிவிடும். info

• شدة عداوة اليهود والمشركين لأهل الإسلام، وفي المقابل وجود طوائف من النصارى يدينون بالمودة للإسلام؛ لعلمهم أنه دين الحق.
4. யூதர்களும் இணைவைப்பாளர்களும் முஸ்லிம்களை கடுமையாக எதிர்ப்பவர்கள். அவர்களுக்கு மாறாக கிறிஸ்தவர்களில் சில குழுக்கள் இஸ்லாம்தான் சத்திய மார்க்கம் என்பதை அறிந்திருப்பதால் இஸ்லாத்தை நேசிக்கின்றனர். info