Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
12 : 49

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِیْرًا مِّنَ الظَّنِّ ؗ— اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا یَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا ؕ— اَیُحِبُّ اَحَدُكُمْ اَنْ یَّاْكُلَ لَحْمَ اَخِیْهِ مَیْتًا فَكَرِهْتُمُوْهُ ؕ— وَاتَّقُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِیْمٌ ۟

49.12. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! காரணம், ஆதாரமற்ற அதிகமான சந்தேகங்களிலிருந்தும் விலகியிருங்கள். சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றது. (உதாரணமாக வெளிரங்கத்தில் நன்நடத்தையுடையவரைப் பற்றி தவறாக எண்ணுதல்) நம்பிக்கையாளர்களின் குறைகளை அவர்களின் பின்னால் சென்று துருவித்துருவி ஆராயாதீர்கள். உங்களில் ஒருவர் தம் சகோதரனைக் குறித்து அவர் விரும்பாததை பேச வேண்டாம். அவர் வெறுப்பதைப் பேசுவதானது அவர் மரணித்த நிலையில் அவரது மாமிசத்தை உண்பதைப் போன்றதாகும். உங்களில் ஒருவர் இறந்த தம் சகோதரனின் மாமிசத்தை புசிக்க விரும்புவாரா? ஆகவே அதைப்போன்று புறம் பேசுவதை வெறுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். info
التفاسير:
Benefits of the verses in this page:
• سوء الظن بأهل الخير معصية، ويجوز الحذر من أهل الشر بسوء الظن بهم.
1. நல்லவர்களைப் பற்றி தீய எண்ணம் கொள்வது பாவமாகும். ஆனால் தீயவர்களைப் பற்றி தீய எண்ணம் கொண்டு எச்சரிக்கையாக இருப்பது அனுமதிக்கப்பட்டதாகும். info

• وحدة أصل بني البشر تقتضي نبذ التفاخر بالأنساب.
2. மனித இனத்தின் அடிப்படை ஒன்றாக இருப்பது வம்சத்தைக் கொண்டு பெருமையடிப்பதை தூக்கியயெறிந்து விடவேண்டும் என்பதையே வேண்டுகின்றது. info

• الإيمان ليس مجرد نطق لا يوافقه اعتقاد، بل هو اعتقاد بالجَنان، وقول باللسان، وعمل بالأركان.
3. ஈமான் என்பது நம்பிக்கைக்கு மாற்றமாக வெறும் நாவால் கூறும் வார்த்தையல்ல. மாறாக உள்ளத்தால் நம்பிக்கைகொண்டு நாவால் வெளிப்படுத்தி உறுப்புகளால் செயல்படுத்திக் காட்டுவதாகும். info

• هداية التوفيق بيد الله وحده وهي فضل منه سبحانه ليست حقًّا لأحد.
4. நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அது அல்லாஹ்வின் மேலதிக அருளாகும். அது யாருடைய உரிமையுமல்ல. info