Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

அல்அஹ்காப்

Purposes of the Surah:
بيان حاجة البشريّة للرسالة وإنذار المعرضين عنها.
மனிதர்கள் இறைதூதின் பக்கம் தேவையுடையவர்கள் என்பதைத் தெளிவுபடுத்தி அதனைப் புறக்கணிப்போரை எச்சரித்தல் info

external-link copy
1 : 46

حٰمٓ ۟ۚ

43.1. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. info
التفاسير:

external-link copy
2 : 46

تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟

46.2. இது யாவற்றையும் மிகைத்தவனும் படைப்பிலும் நிர்ணயித்திலும் சட்டதிட்டத்திலும் ஞானம்மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட குர்ஆனாகும். info
التفاسير:

external-link copy
3 : 46

مَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَاَجَلٍ مُّسَمًّی ؕ— وَالَّذِیْنَ كَفَرُوْا عَمَّاۤ اُنْذِرُوْا مُعْرِضُوْنَ ۟

46.3. வானங்களையும் பூமியையும் அவற்றிற்கு இடையிலுள்ளவற்றையும் நாம் வீணாகப் படைக்கவில்லை. மாறாக அவையனைத்தையும் நாம் ஓர் உயர்ந்த நோக்கத்துடன் உண்மையாகவே படைத்துள்ளோம். அவற்றுள் ஒன்று, அடியார்கள் அவற்றின் மூலம் அல்லாஹ்வை அறிந்து அவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ் மாத்திரமே அறிந்த குறிப்பிட்ட தவணை வரையும் பூமியில் தனது பிரதிநிதித்துவத்தின் கடமைகளை நிறைவேற்றவதுமாகும். அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் அவனுடைய வேதத்தில் தங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் புறக்கணிக்கிறார்கள்.
info
التفاسير:

external-link copy
4 : 46

قُلْ اَرَءَیْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَرُوْنِیْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِی السَّمٰوٰتِ ؕ— اِیْتُوْنِیْ بِكِتٰبٍ مِّنْ قَبْلِ هٰذَاۤ اَوْ اَثٰرَةٍ مِّنْ عِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

46.4. -தூதரே!- சத்தியத்தைப் புறக்கணிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் சிலைகளைக் குறித்து எனக்கு அறிவியுங்கள். அவை பூமியில் எந்தப் பகுதியைப் படைத்தன? அவை ஒரு மலையையாவது படைத்தனவா? ஒரு ஆறையாவது படைத்தனவா? அல்லது வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததில் அல்லாஹ்வுடன் அவற்றிற்கும் பங்கு இருக்கின்றதா? நிச்சயமாக சிலைகள் வணக்கத்திற்குத் தகுதியானவை என்று நீங்கள் கூறும் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் குர்ஆனுக்கு முன்னால் அல்லாஹ்விடமிருந்து இறங்கிய ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள். அல்லது முன்னோர்கள் விட்டுச் சென்ற அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியை கொண்டுவாருங்கள். info
التفاسير:

external-link copy
5 : 46

وَمَنْ اَضَلُّ مِمَّنْ یَّدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَنْ لَّا یَسْتَجِیْبُ لَهٗۤ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ وَهُمْ عَنْ دُعَآىِٕهِمْ غٰفِلُوْنَ ۟

46.5. அல்லாஹ் அல்லாத தன்னுடைய அழைப்புக்கு மறுமை நாள் வரை பதிலளிக்காத சிலைகளை வணங்குபவனை விட வழிகெட்டவன் வேறு யாரும் இல்லை. அல்லாஹ் அல்லாத அவர்கள் வணங்கும் சிலைகள் அவர்களுக்குப் பலனளிப்பதும் தீங்கிழைப்பதும் எப்படிப்போனாலும் தம்மை வணங்குபவர்களின் பிரார்த்தனையைக் கூட அறியாமல் இருக்கிறது. info
التفاسير:
Benefits of the verses in this page:
• الاستهزاء بآيات الله كفر.
1. அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசம் செய்வது நிராகரிப்பாகும். info

• خطر الاغترار بلذات الدنيا وشهواتها.
2. உலக இன்பங்களைக் கொண்டு ஏமாறுவதன் விபரீதம். info

• ثبوت صفة الكبرياء لله تعالى.
3. அல்லாஹ்வுக்கு பெருமை என்ற பண்பும் உள்ளது என்பது உறுதியாகிறது. info

• إجابة الدعاء من أظهر أدلة وجود الله سبحانه وتعالى واستحقاقه العبادة.
4. பிரார்த்தனைக்குப் பதிலளிப்பது அல்லாஹ் இருக்கிறான், அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதற்கான தெளிவான ஆதாரங்களில் ஒன்றாகும். info