Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
13 : 45

وَسَخَّرَ لَكُمْ مَّا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ جَمِیْعًا مِّنْهُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟

45.13. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகிய வானங்களிலுள்ளவற்றையும் மலைகள், மரங்கள், ஆறுகள் போன்ற பூமியிலுள்ளவற்றையும் அவன் உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளான். இவ்வனைத்து அருட்கொடைகளும் அவனது அருளும் உபகாரமுமாகும். நிச்சயமாக உங்களுக்காக இவ்வாறு வசப்படுத்தித் தந்துள்ளதில் அல்லாஹ்வின் சான்றுகளில் சிந்தனை செலுத்தி அவற்றைக் கொண்டு படிப்பினை பெறுவோருக்கு அவன் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன.
info
التفاسير:
Benefits of the verses in this page:
• الكذب والإصرار على الذنب والكبر والاستهزاء بآيات الله: صفات أهل الضلال، وقد توعد الله المتصف بها.
1. பொய் கூறுதல், பாவத்தில் நிலைத்திருத்தல், பெருமையடித்தல், அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசம் செய்தல் ஆகியவை வழிகேடர்களின் பண்புகளாகும். இந்த பண்புகளை உடையவர்களை அல்லாஹ் எச்சரித்துள்ளான். info

• نعم الله على عباده كثيرة، ومنها تسخير ما في الكون لهم.
2. அல்லாஹ் தன் அடியார்களின் மீது பொழிந்த அருட்கொடைகள் ஏராளமானவை. அவற்றில் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அவர்களுக்காக வசப்படுத்தப்பட்டுள்ளதும் அடங்கும். info

• النعم تقتضي من العباد شكر المعبود الذي منحهم إياها.
3. அருட்கொடைகள் அடியார்களை அவற்றை அவர்களுக்கு அளித்த இறைவனுக்கு நன்றி செலுத்துமாறு ணே்டி நிற்கின்றன. info