Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
24 : 41

فَاِنْ یَّصْبِرُوْا فَالنَّارُ مَثْوًی لَّهُمْ ؕ— وَاِنْ یَّسْتَعْتِبُوْا فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِیْنَ ۟

41.24. யாருக்கு எதிராக அவர்களின் செவிகளும் பார்வைகளும் தோல்களும் சாட்சி கூறியதோ அவர்கள் பொறுமையாக இருந்தாலும் நரகமே அவர்களின் தங்குமிடமாகும், ஒதுங்குமிடமுமாகும். தண்டனையை அகற்றி அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டும் என நாடினாலும் அவனது திருப்தியை அவர்கள் பெறவோ சுவனத்தில் நுழையவோமாட்டார்கள். info
التفاسير:
Benefits of the verses in this page:
• سوء الظن بالله صفة من صفات الكفار.
1. அல்லாஹ்வைக் குறித்து தீய எண்ணம் கொள்வது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும். info

• الكفر والمعاصي سبب تسليط الشياطين على الإنسان.
2. நிராகரிப்பும் பாவங்களும் மனிதர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணமாகும். info

• تمنّي الأتباع أن ينال متبوعوهم أشدّ العذاب يوم القيامة.
3. தலைவர்களைப் பின்பற்றிய தொண்டர்கள் மறுமை நாளில் தங்களின் தலைவர்கள் கடுமையான வேதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். info