Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
37 : 40

اَسْبَابَ السَّمٰوٰتِ فَاَطَّلِعَ اِلٰۤی اِلٰهِ مُوْسٰی وَاِنِّیْ لَاَظُنُّهٗ كَاذِبًا ؕ— وَكَذٰلِكَ زُیِّنَ لِفِرْعَوْنَ سُوْٓءُ عَمَلِهٖ وَصُدَّ عَنِ السَّبِیْلِ ؕ— وَمَا كَیْدُ فِرْعَوْنَ اِلَّا فِیْ تَبَابٍ ۟۠

40.37. அவனின்பால் சென்றடையக்கூடிய வானத்தின் வாயில்கள் மூலம் அவனை அடைந்து வணங்குவதற்குத் தகுதியான இறைவன் என்று மூஸா கருதும் அந்த இறைவனை நான் காண்பதற்காக. நிச்சயமாக நான் மூஸா வாதிடுவதில் அவர் பொய்யர் என்றே கருதுகிறேன்.” இவ்வாறு ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல் அலங்கரித்துக் காட்டப்பட்டது. எனவே தான் ஹாமானிடம் இவ்வாறு வேண்டிக்கொண்டான். அவன் சத்திய வழியை விட்டும் அசத்திய வழிகளின் பக்கம் திருப்பப்பட்டான். -தன்னிடம் உள்ள அசத்தியத்தை மேலோங்கச் செய்யவும் மூஸா கொண்டுவந்த சத்தியத்தை பொய் எனக் காட்டவும்- ஃபிர்அவ்ன் செய்த சூழ்ச்சி தோல்வியடையக் கூடியதே. ஏனெனில் நிச்சயமாக அதன் முடிவு ஏமாற்றமும் தோல்வி மிக்க முயற்சியும், முடிவடையாத துர்பாக்கியமுமே. info
التفاسير:
Benefits of the verses in this page:
• الجدال لإبطال الحق وإحقاق الباطل خصلة ذميمة، وهي من صفات أهل الضلال.
1. சத்தியத்தை அசத்தியம் எனக் காட்டவும் அசத்தியத்தை சத்தியம் எனக் காட்டவும் வாதம் செய்வது மோசமான பண்பாகும். இது வழிகேடர்களின் பண்புகளில் ஒன்றாகும். info

• التكبر مانع من الهداية إلى الحق.
2. கர்வம் சத்தியத்தின்பால் நேர்வழிபெறுவதற்கு தடையாக இருக்கின்றது. info

• إخفاق حيل الكفار ومكرهم لإبطال الحق.
3. சத்தியத்தை முறியடிப்பதற்காக நிராகரிப்பாளர்கள் செய்யும் சூழ்ச்சிகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். info

• وجوب الاستعداد للآخرة، وعدم الانشغال عنها بالدنيا.
4. உலக இன்பங்களில் மூழ்கிவிடாமல் மறுமைக்காக நம்மை தயார்படுத்திக் கொள்வது கட்டாயமாகும். info