Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
150 : 4

اِنَّ الَّذِیْنَ یَكْفُرُوْنَ بِاللّٰهِ وَرُسُلِهٖ وَیُرِیْدُوْنَ اَنْ یُّفَرِّقُوْا بَیْنَ اللّٰهِ وَرُسُلِهٖ وَیَقُوْلُوْنَ نُؤْمِنُ بِبَعْضٍ وَّنَكْفُرُ بِبَعْضٍ ۙ— وَّیُرِیْدُوْنَ اَنْ یَّتَّخِذُوْا بَیْنَ ذٰلِكَ سَبِیْلًا ۙ۟

4.150. அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு அவனுடைய தூதர்களை நிராகரித்து அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர்களுக்குமிடையே பிரிவினை ஏற்படுத்த நினைப்பவர்கள், தூதர்கள் சிலரின்மீது நம்பிக்கை கொள்வோம், சிலரை நிராகரித்துவிடுவோம் என்று கூறுபவர்கள், தம்மைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் ஈமானுக்கும் நிராகரிப்பிற்குமிடையே ஒரு பாதையை உருவாக்க நினைக்கின்றார்கள்.
info
التفاسير:
Benefits of the verses in this page:
• يجوز للمظلوم أن يتحدث عن ظلمه وظالمه لمن يُرْجى منه أن يأخذ له حقه، وإن قال ما لا يسر الظالم.
1. அநீதி இழைக்கப்பட்டவன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப்பற்றி, அநியாயக்காரர்களைப்பற்றி, தனக்கு உரிமைகளைப் பெற்றுத்தருவார் என்று நம்புபவரிடம் எடுத்துரைக்கலாம். அதனை அநீதி இழைத்தவன் விரும்பாவிட்டாலும் சரியே. info

• حض المظلوم على العفو - حتى وإن قدر - كما يعفو الرب - سبحانه - مع قدرته على عقاب عباده.
2. தனது அடியார்களைத் தண்டிப்பதற்குச் சக்தியிருந்தும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குவது போன்று, அநீதி இழைக்கப்பட்டவன் சக்தியிருந்தாலும் மன்னிக்குமாறு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. info

• لا يجوز التفريق بين الرسل بالإيمان ببعضهم دون بعض، بل يجب الإيمان بهم جميعًا.
3. தூதர்கள் சிலரின் மீது நம்பிக்கைகொண்டு சிலரை நம்பாமல் பாகுபாடு காட்டுவது நிராகரிப்பாகும். தூதர்கள் அனைவரின் மீதும் நம்பிக்கைகொள்வது கட்டாயமாகும். info