Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
5 : 39

خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ۚ— یُكَوِّرُ الَّیْلَ عَلَی النَّهَارِ وَیُكَوِّرُ النَّهَارَ عَلَی الَّیْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ؕ— كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ— اَلَا هُوَ الْعَزِیْزُ الْغَفَّارُ ۟

39.5. அவன் வானங்களையும் பூமியையும் பாரிய நோக்கத்தோடு படைத்துள்ளான். அநியாயக்காரர்கள் கூறுவதுபோல அவன் வீணாகப் படைக்கவில்லை. அவன் இரவை பகலில் பிரவேசிக்கச் செய்கின்றான். பகலை இரவில் பிரவேசிக்கச் செய்கின்றான். ஒன்று வெளிப்பட்டால் மற்றொன்று மறைந்து விடுகிறது. அவன் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தித் தந்துள்ளான். ஒவ்வொன்றும் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம்வரை இந்த வாழ்க்கை முடியும்வரை சென்று கொண்டிருக்கும். அவன்தான் தன் எதிரிகளைத் தண்டிக்கக்கூடிய அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவன். info
التفاسير:
Benefits of the verses in this page:
• الداعي إلى الله يحتسب الأجر من عنده، لا يريد من الناس أجرًا على ما يدعوهم إليه من الحق.
1. அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் அழைப்பாளர் அல்லாஹ்விடமே கூலியை எதிர்பார்க்கிறார். சத்தியத்தின் பக்கம் அழைப்பதற்கு அவர் மக்களிடம் கூலியை எதிர்பார்க்கமாட்டார். info

• التكلّف ليس من الدِّين.
2. வலிந்து செயற்படுவது மார்க்கத்தில் உள்ளதல்ல. info

• التوسل إلى الله يكون بأسمائه وصفاته وبالإيمان وبالعمل الصالح لا غير.
3. அல்லாஹ்வின் பண்புகள், பெயர்கள் மற்றும் நற்செயல்களைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்கலாம். ஏனையவற்றைக் கொண்டல்ல. info