Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
43 : 39

اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ شُفَعَآءَ ؕ— قُلْ اَوَلَوْ كَانُوْا لَا یَمْلِكُوْنَ شَیْـًٔا وَّلَا یَعْقِلُوْنَ ۟

39.43. அல்லாஹ்வை விடுத்து தங்களுக்குப் பயனளிக்கும் என்று இணைவைப்பாளர்கள் ஆதரவு வைக்கும் சிலைகளைப் பரிந்துரை செய்பவர்களாக எடுத்துக் கொண்டார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “உங்களுக்கோ, தமக்கோ எதையும் சொந்தமாக்க முடியாத, எதையும் விளங்கிக்கொள்ள முடியாதவற்றையும் கூட நீங்கள் பரிந்துரை செய்பவர்களாக ஆக்கிக் கொள்கிறீர்களா?. ஏனெனில் அவை பேசவோ, செவியேற்கவோ, பார்க்கவோ, பயனளிக்கவோ, தீங்கிழைக்கவோ இயலாத ஒன்றையும் கேட்காத சடப்பொருள்களாகும்.” info
التفاسير:
Benefits of the verses in this page:
• النوم والاستيقاظ درسان يوميان للتعريف بالموت والبعث.
1. தூக்கமும் விழிப்பும் மரணத்தையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதையும் அறிந்துகொள்வதற்கான தினசரி பாடங்களாகும். info

• إذا ذُكِر الله وحده عند الكفار أصابهم ضيق وهمّ؛ لأنهم يتذكرون ما أمر به وما نهى عنه وهم معرضون عن هذا كله.
2. நிராகரிப்பாளர்களிடம் அல்லாஹ் ஒருவன் நினைவுகூரப்பட்டால் கவலையும் நெருக்கடியும் ஏற்படும். ஏனெனில் அவர்கள் அவன் ஏவியவைகளையும் தடுத்தவைகளையும் நினைத்துப் பார்க்கிறார்கள். அவையனைத்தையும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள். info

• يتمنى الكافر يوم القيامة افتداء نفسه بكل ما يملك مع بخله به في الدنيا، ولن يُقْبل منه.
3. நிராகரிப்பாளன் இவ்வுலகில் கஞ்சத்தனமாக நடந்துகொண்டாலும் மறுமை நாளில் தன்னிடம் உள்ள அனைத்தையும் ஈடாகக் கொடுத்துவிட விரும்புவான். ஆனால் அவனிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. info