Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
24 : 39

اَفَمَنْ یَّتَّقِیْ بِوَجْهِهٖ سُوْٓءَ الْعَذَابِ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— وَقِیْلَ لِلظّٰلِمِیْنَ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟

39.24. யாருக்கு அல்லாஹ் உலகில் நேர்வழிகாட்டி பாக்கியம் அளித்து மறுமையில் அவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வானோ அவரும் யார் நிராகரித்த நிலையிலேயே மரணித்து அல்லாஹ் அவரை கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் நரகத்தில் பிரவேசிக்கச் செய்துவிடுவானோ அவரும் சமமாவார்களா என்ன? முகங்குப்புற வீழ்ந்து கிடக்கும் அவர் தன் முகத்தால்தான் நரக நெருப்பைத் தடுக்க வேண்டும். நிராகரித்து, பாவங்கள் புரிந்து தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களிடம் இழிவாக கூறப்படும்: “நிராகரித்து, பாவங்கள் புரிந்து நீங்கள் சம்பாதித்த வேதனையை அனுபவியுங்கள். இதுதான் உங்களுக்கான கூலியாகும். info
التفاسير:
Benefits of the verses in this page:
• أهل الإيمان والتقوى هم الذين يخشعون لسماع القرآن، وأهل المعاصي والخذلان هم الذين لا ينتفعون به.
1. ஈமான் மற்றும் தக்வா உடையவர்களே குர்ஆனைச் செவியுற்று இறைவனை அஞ்சுகிறார்கள். பாவிகளும் கைவிடப்பட்டவர்களும் அதனைக் கொண்டு பயனடைவதில்லை. info

• التكذيب بما جاءت به الرسل سبب نزول العذاب إما في الدنيا أو الآخرة أو فيهما معًا.
2.தூதர்கள் கொண்டுவந்ததை பொய்ப்பிப்பது இவ்வுலகில் அல்லது மறுமையில் அல்லது ஈருலகிலும் தண்டனை இறங்குவதற்குக் காரணமாகும். info

• لم يترك القرآن شيئًا من أمر الدنيا والآخرة إلا بيَّنه، إما إجمالًا أو تفصيلًا، وضرب له الأمثال.
3. இவ்வுலக, மறுவுலக காரியங்களில் எதனையும் சுருக்கமாகவோ அல்லது விரிவாகவோ தெளிவுபடுத்தாமல் எந்தவொரு விடயத்தையும் அல்குர்ஆன் விடவில்லை. அதற்கு உதாரணங்களையும் கூறியுள்ளது. info