Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
20 : 33

یَحْسَبُوْنَ الْاَحْزَابَ لَمْ یَذْهَبُوْا ۚ— وَاِنْ یَّاْتِ الْاَحْزَابُ یَوَدُّوْا لَوْ اَنَّهُمْ بَادُوْنَ فِی الْاَعْرَابِ یَسْاَلُوْنَ عَنْ اَنْۢبَآىِٕكُمْ ؕ— وَلَوْ كَانُوْا فِیْكُمْ مَّا قٰتَلُوْۤا اِلَّا قَلِیْلًا ۟۠

33.20. நபியவர்களுடனும் நம்பிக்கையாளர்களுடனும் போரிடத் திரண்டிருக்கும் படைகள் நிச்சயமாக நம்பிக்கையாளர்களை அடியோடு அழிக்காமல் ஒருபோதும் செல்ல மாட்டார்கள் என்று இந்தக் கோழைகள் எண்ணிக் கொண்டுள்ளனர். ஒருவேளை மீண்டும் படைகள் வந்துவிட்டால் மதீனாவில் இருந்து வெளியேறி நாட்டுப்புற அரபிகளுடன் சேர்ந்து உங்கள் எதிரிகள் உங்களுடன் போர்செய்த பின் என்ன நடந்தது என உங்கள் செய்திகளை அறிய விரும்புவார்கள். -நம்பிக்கையாளர்களே!- அவர்கள் உங்களுடன் இருந்தாலும் பெரிதாகப் போரிடப் போவதில்லை. எனவே அவர்களைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களுக்காக வருத்தப்படாதீர்கள். info
التفاسير:
Benefits of the verses in this page:
• الآجال محددة؛ لا يُقَرِّبُها قتال، ولا يُبْعِدُها هروب منه.
1. தவணைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டன. போர் அவற்றை விரைவாகக் கொண்டுவந்துவிடாது. தப்பி ஓடுதல் அவற்றைத் தூரப்படுத்திவிடாது. info

• التثبيط عن الجهاد في سبيل الله شأن المنافقين دائمًا.
2. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்ய விடாமல் தடுப்பது நயவஞ்சகர்களின் வழக்கமாகும். info

• الرسول صلى الله عليه وسلم قدوة المؤمنين في أقواله وأفعاله.
3. நபியவர்கள் தனது சொல்லிலும் செயலிலும் நம்பிக்கையாளர்களின் முன்மாதிரி. info

• الثقة بالله والانقياد له من صفات المؤمنين.
4. அல்லாஹ்வின் மீது உறுதிபூண்டு அவனுக்குக் கட்டுப்படல் நம்பிக்கையாளர்களின் பண்புகளாகும். info