Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
103 : 3

وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِیْعًا وَّلَا تَفَرَّقُوْا ۪— وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَلَّفَ بَیْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا ۚ— وَكُنْتُمْ عَلٰی شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟

3.103. நம்பிக்கையாளர்களே! குர்ஆனையும் சுன்னாவையும் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். பிரிவினையை உண்டாக்கும் செயல்பாடுகளில் ஈடுபடாதீர்கள். அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள், நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அற்ப காரணங்களுக்காகக்கூட ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்ளும் எதிரிகளாக இருந்தீர்கள். இஸ்லாத்தின்மூலம் அல்லாஹ் உங்கள் உள்ளங்களை ஒன்றுசேர்த்தான். அவனது அருளால் நீங்கள் மார்க்க சகோதரர்களாக, ஒருவருக்கொருவர் நலம்நாடுபவர்களாக, அன்பானவர்களாக ஆகிவிட்டீர்கள். உங்களின் நிராகரிப்பினால் நரக விளிம்பின் ஓரத்தில் இருந்தீர்கள். இஸ்லாத்தின்மூலம் அல்லாஹ் உங்களைக் காப்பாற்றினான். ஈமானின்பால் உங்களுக்கு வழிகாட்டினான். இவ்வாறு நீங்கள் நேரான வழியை அடைந்து அதில் நிலைத்திருப்பதற்காக உலகிலும் மறுமையிலும் உங்களின் நிலமைகளைச் சீர்படுத்தக்கூடியவற்றை தெளிவுபடுத்துகிறான். info
التفاسير:
Benefits of the verses in this page:
• متابعة أهل الكتاب في أهوائهم تقود إلى الضلال والبعد عن دين الله تعالى.
1. வேதக்காரர்களின் மனஇச்சைகளைப் பின்பற்றுவது அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டுத் தூரமாக, வழிகேட்டின்பால் இட்டுச்சென்றுவிடும். info

• الاعتصام بالكتاب والسُّنَّة والاستمساك بهديهما أعظم وسيلة للثبات على الحق، والعصمة من الضلال والافتراق.
2. குர்ஆனையும் சுன்னாவின் வழிகாட்டலையும் பற்றிப்பிடித்துக்கொள்வது சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருப்பதற்கும் வழிகேடு, பிரிவினை ஆகியவற்றிலிருந்து காத்துக்கொள்வதற்குமான மிகச் சிறந்த வழிமுறையாகும். info

• الافتراق والاختلاف الواقع في هذه الأمة في قضايا الاعتقاد فيه مشابهة لمن سبق من أهل الكتاب.
3. இந்தச் சமூகம் கொள்கைரீதியான விஷயங்களில் கருத்துவேறுபடுவது முந்தைய வேதக்காரர்களுக்கு ஒப்பானதாகும். info

• وجوب الأمر بالمعروف والنهي عن المنكر؛ لأن به فلاح الأمة وسبب تميزها.
4. நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது கட்டாயக் கடமையாகும். இந்த சமூகத்தின் வெற்றியும் அதன் தனிச்சிறப்புக்கான காரணியும் இதில்தான் அடங்கியுள்ளது. info