Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
87 : 28

وَلَا یَصُدُّنَّكَ عَنْ اٰیٰتِ اللّٰهِ بَعْدَ اِذْ اُنْزِلَتْ اِلَیْكَ وَادْعُ اِلٰی رَبِّكَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۚ

28.87. அல்லாஹ்வின் வசனங்கள் உம்மீது இறங்கிய பின்னரும் இந்த இணைவைப்பாளர்கள் அவற்றைவிட்டும் உம்மைத் திசை திருப்பிவிட வேண்டாம். நீர் அவற்றை ஓதுவதையோ எடுத்துரைப்பதையோ விட்டுவிடாதீர். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளும்படியும் அவனை ஒருமைப்படுத்தும்படியும் அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படும்படியும் மக்களை அழைப்பீராக. அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் வணங்கும் இணைவைப்பாளர்களில் ஒருவராகிவிடாதீர். மாறாக அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் ஓரிறைக்கொள்கையுடையவராக இருப்பீராக. info
التفاسير:
Benefits of the verses in this page:
• النهي عن إعانة أهل الضلال.
1. வழிகேடர்களுக்கு உதவுவதைத் தடைசெய்தல் info

• الأمر بالتمسك بتوحيد الله والبعد عن الشرك به.
2. ஓரிறைக் கொள்கையை உறுதியாக பற்றிக் கொண்டு இணைவைப்பை விட்டும் விலகியிருக்குமாறு ஏவுதல். info

• ابتلاء المؤمنين واختبارهم سُنَّة إلهية.
3. நம்பிக்கையாளர்களை சோதிப்பது இறைவனின் வழிமுறையாகும். info

• غنى الله عن طاعة عبيده.
4. அடியார்களின் அடிபணிதலை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். info