Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
71 : 28

قُلْ اَرَءَیْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَیْكُمُ الَّیْلَ سَرْمَدًا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ مَنْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ یَاْتِیْكُمْ بِضِیَآءٍ ؕ— اَفَلَا تَسْمَعُوْنَ ۟

28.71. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ் மறுமை நாள் வரை முடிவின்றி இரவை உங்கள் மீது நிரந்தரமாக்கிவிட்டால் அல்லாஹ்வைத் தவிர எந்த இறைவனால் உங்களுக்கு பகலின் ஒளியைப் போன்ற ஓர் ஒளியைக் கொண்டுவர முடியும்? என்பதை எனக்கு அறிவியுங்கள். நீங்கள் இந்த ஆதாரங்களை செவியேற்று, அதனைக் கொண்டுவர அல்லாஹ்வைத் தவிரவுள்ள வேறு எந்த இறைவனும் இல்லை என்பதை அறிய மாட்டீர்களா?” info
التفاسير:
Benefits of the verses in this page:
• تعاقب الليل والنهار نعمة من نعم الله يجب شكرها له.
1. இரவு, பகல் ஒன்றன்பின் ஒன்றாக மாறிமாறி வருவது அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்றாகும். இதற்கு நன்றி செலுத்துவது கடமையாகும். info

• الطغيان كما يكون بالرئاسة والملك يكون بالمال.
2. அதிகாரம், தலைமைத்துவம் வரம்பு மீறலை ஏற்படுத்துவது போன்று செல்வமும் வரம்புமீறலை ஏற்படுத்தும். info

• الفرح بَطَرًا معصية يمقتها الله.
3. கர்வத்தினால் பூரிப்படைவது அல்லாஹ் வெறுக்கின்ற பாவமாகும். info

• ضرورة النصح لمن يُخاف عليه من الفتنة.
4. குழப்பத்திற்குள்ளாவார் என அஞ்சப்படுவோருக்கு உபதேசம் புரிவது இன்றியமையாததாகும். info

• بغض الله للمفسدين في الأرض.
5. பூமியில் குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் வெறுக்கிறான். info