Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
27 : 28

قَالَ اِنِّیْۤ اُرِیْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَی ابْنَتَیَّ هٰتَیْنِ عَلٰۤی اَنْ تَاْجُرَنِیْ ثَمٰنِیَ حِجَجٍ ۚ— فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ ۚ— وَمَاۤ اُرِیْدُ اَنْ اَشُقَّ عَلَیْكَ ؕ— سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِیْنَ ۟

28.27. அவர்களின் தந்தை மூஸாவிடம் கூறினார்: “நீர் எட்டு ஆண்டுகள் என் ஆடுகளை மேய்க்க வேண்டும் என்பதை மஹராக -மணக்கொடையாக- ஆக்கி இரு பெண்களில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தர விரும்புகிறேன். நீர் பத்து ஆண்டுகள் நிறைவு செய்தால் அது நீர் செய்யும் உபகாரமாகும். உமக்கு கட்டாயம் அல்ல. நிச்சயமாக உடன்படிக்கை எட்டு ஆண்டுகள் தான். அதற்கு மேல் உள்ளவை விரும்பத்தக்கதுதான். உனக்கு சிரமமாக இருப்பதை நான் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் ஒப்பந்தங்களை முறிக்காமல் நிறைவேற்றும் நல்லவர்களில் ஒருவராக என்னை நீர் காண்பீர். info
التفاسير:
Benefits of the verses in this page:
• الالتجاء إلى الله طريق النجاة في الدنيا والآخرة.
1. அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுவது இவ்வுலகிலும் மறுவுலகிலும் தப்புவதற்கான வழியாகும். info

• حياء المرأة المسلمة سبب كرامتها وعلو شأنها.
2.முஸ்லிமான பெண்ணின் நாணமே அவளின் கண்ணியத்திற்கும் உயர்வுக்கும் காரணம் ஆகும். info

• مشاركة المرأة بالرأي، واعتماد رأيها إن كان صوابًا أمر محمود.
3. அபிப்பிராயத்தில் பெண்ணும் கலந்துகொண்டு, அவளது ஆலோசனை சரியானதாக இருந்தால் அதன்படி செயல்படுவது புகழத்தக்க விடயமாகும். info

• القوة والأمانة صفتا المسؤول الناجح.
4. பலமும் அமானிதமும் வெற்றிகரமான பொறுப்பாளனின் இரு பண்புகளாகும். info

• جواز أن يكون المهر منفعة.
5. மணக்கொடை பயனாகவும் இருக்கலாம். info