Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
77 : 25

قُلْ مَا یَعْبَؤُا بِكُمْ رَبِّیْ لَوْلَا دُعَآؤُكُمْ ۚ— فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ یَكُوْنُ لِزَامًا ۟۠

25.77. -தூதரே!- நிராகரிப்பில் பிடிவாதமாக இருக்கும் நிராகரிப்பாளர்களிடம் கூறுவீராக: “என் இறைவன் உங்கள் வழிபாட்டினால் தனக்கு பயன் கிடைக்கிறது என்பதற்காக உங்களைப் பொருட்படுத்துவதில்லை. பிரார்த்தனையினாலும் வணக்கத்தினாலும் அவனை அழைக்கும் அடியார்கள் இல்லையெனில் அவன் உங்களைப் பொருட்படுத்தியிருக்கமாட்டான். நீங்கள் தூதரை அவர் தன் இறைவனிடமிருந்து கொண்டுவந்ததில் பொய்பித்து விட்டீர்கள். பொய்ப்பித்ததற்கான கூலி உங்களுடனே இருக்கும். info
التفاسير:
Benefits of the verses in this page:
• من صفات عباد الرحمن: البعد عن الشرك، وتجنُّب قتل الأنفس بغير حق، والبعد عن الزنى، والبعد عن الباطل، والاعتبار بآيات الله، والدعاء.
1. அளவிலாக் கருணையாளனுடைய அடியார்களின் பண்புகள்: அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்குவதை, விபச்சாரம் செய்வதை விட்டும், அசத்தியத்தில் இருந்தும் தூரமாக இருப்பார்கள், உரிமை இல்லாமல் யாரையும் கொல்லாமல் தவிர்ந்து இருப்பார்கள், அல்லாஹ்வின் சான்றுகளைக்கொண்டு படிப்பினை பெறுவார்கள், பிரார்த்தனை புரிவார்கள். info

• التوبة النصوح تقتضي ترك المعصية وفعل الطاعة.
2. ؤண்மையான திருத்தம் பாவங்களை விட்டுவிட்டு வணக்க வழிபாடுகளைச் செய்யத் தூண்டுவதாக இருக்கும். info

• الصبر سبب في دخول الفردوس الأعلى من الجنة.
3. பொறுமை மனிதன் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைவதற்குக் காரணமாக இருக்கின்றது. info

• غنى الله عن إيمان الكفار.
4. நிராகரிப்பாளர்களின் நம்பிக்கையைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன். info