Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
55 : 24

وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَیَسْتَخْلِفَنَّهُمْ فِی الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۪— وَلَیُمَكِّنَنَّ لَهُمْ دِیْنَهُمُ الَّذِی ارْتَضٰی لَهُمْ وَلَیُبَدِّلَنَّهُمْ مِّنْ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا ؕ— یَعْبُدُوْنَنِیْ لَا یُشْرِكُوْنَ بِیْ شَیْـًٔا ؕ— وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟

24.55. உங்களில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு அவன் பின்வருமாறு வாக்களிக்கிறான்: “அவன் அவர்களின் எதிரிகளுக்கு எதிராக அவர்களுக்கு உதவிபுரிந்து அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த நம்பிக்கையாளர்களை பிரதிநிதிகளாக ஆக்கியது போன்று அவர்களையும் பூமியில் பிரதிநிதிகளாக ஆக்குவான். அவன் ஏற்றுக்கொண்ட அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தை மேலோங்கியதாகவும் நிலைபெற்றதாகவும் ஆக்குவான். அவர்களுக்கு ஏற்பட்ட அச்சத்திற்குப் பிறகு அவர்களை அமைதியானவர்களாக மாற்றுவான்.” அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு யாரையும் இணையாக்கமாட்டார்கள். இதன் பின்னரும் இந்த அருட்கொடைகளுக்கு யார் நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்வார்களோ அவர்கள்தாம் அல்லாஹ்வுக்கு அடிபணிவதை விட்டும் வெளியேறியவர்கள். info
التفاسير:
Benefits of the verses in this page:
• اتباع الرسول صلى الله عليه وسلم علامة الاهتداء.
1. தூதரைப் பின்பற்றுவது நேர்வழி பெற்றிருப்பதன் அடையாளமாகும். info

• على الداعية بذل الجهد في الدعوة، والنتائج بيد الله.
2. அழைப்பதில் கடுமையாக முயற்சி செய்வதே அழைப்பாளர் மீதுள்ள கடமையாகும். முடிவுகள் அல்லாஹ்விடமே உள்ளன. info

• الإيمان والعمل الصالح سبب التمكين في الأرض والأمن.
3. ஈமானும் நற்செயலும் பூமியில் அதிகாரமும் அமைதியும் கிடைப்பதற்குக் காரணியாக இருக்கின்றது. info

• تأديب العبيد والأطفال على الاستئذان في أوقات ظهور عورات الناس.
4. மக்களின் மறைவிடங்கள் வெளிப்படும் நேரங்களில் அனுமதி கேட்பதற்கு அடிமைகளையும் பிள்ளைகளையும் பழக்குதல். info