Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
44 : 23

ثُمَّ اَرْسَلْنَا رُسُلَنَا تَتْرَا ؕ— كُلَّ مَا جَآءَ اُمَّةً رَّسُوْلُهَا كَذَّبُوْهُ فَاَتْبَعْنَا بَعْضَهُمْ بَعْضًا وَّجَعَلْنٰهُمْ اَحَادِیْثَ ۚ— فَبُعْدًا لِّقَوْمٍ لَّا یُؤْمِنُوْنَ ۟

23.44. பின்னர் நாம் நம் தூதர்களை ஒவ்வொருவராக தொடர்ந்து அனுப்பினோம். எந்தவொரு சமுதாயத்துக்கும் அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர் வந்தபோதெல்லாம் அவரை அவர்கள் பொய்ப்பித்துக் கொண்டுதான் இருந்தார்கள். எனவே நாம் அந்த சமூகங்களை ஒன்றன்பின் ஒன்றாக அழித்துவிட்டோம். அவர்களைப் பற்றிய மக்கள் பேசிக்கொள்வதைத் தவிர அவர்களின் எந்த ஒன்றும் எஞ்சவில்லை. தூதர்கள் தங்கள் இறைவனிடமிருந்து கொண்டுவந்ததை நம்பிக்கைகொள்ளாத மக்களுக்கு அழிவு உண்டாகட்டும். info
التفاسير:
Benefits of the verses in this page:
• الاستكبار مانع من التوفيق للحق.
1. கர்வம் சத்தியத்தை அடைந்துகொள்வதற்குத் தடையாக இருக்கின்றது. info

• إطابة المأكل له أثر في صلاح القلب وصلاح العمل.
2. உணவில் தூய்மையைப் பேணுவது உள்ளம் மற்றும் செயல்களின் சீர்திருத்தத்தில் தாக்கம் செலுத்தும். info

• التوحيد ملة جميع الأنبياء ودعوتهم.
3. ஓரிறைக் கொள்கையே நபிமார்கள் அனைவரின் மார்க்கமும், அழைப்புமாகும். info

• الإنعام على الفاجر ليس إكرامًا له، وإنما هو استدراج.
4. தீயவருக்கு அருள் புரிவது அவனுக்கு மரியாதையல்ல. அது அவனை விட்டுப்பிடிப்பதே. info