Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
56 : 22

اَلْمُلْكُ یَوْمَىِٕذٍ لِّلّٰهِ ؕ— یَحْكُمُ بَیْنَهُمْ ؕ— فَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟

22.56. -அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட வேதனை அவர்களை வந்தடையும் அந்த மறுமை நாளில் ஆட்சியதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. அங்கு அதில் அவனோடு சர்ச்சைப்படுபவர்கள் யாரும் இல்லை. அவன் நம்பிக்கையாளர்கள் மற்றும் நிராகரிப்பாளர்களிடையே தீர்ப்பளிப்பான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை அளிப்பான். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு என்றும் முடிவுறாத நிலையான பாக்கிய மிக்க சுவனங்கள் எனும் மகத்தான கூலி உண்டு. info
التفاسير:
Benefits of the verses in this page:
• مكانة الهجرة في الإسلام وبيان فضلها.
1. இஸ்லாத்தில் புலம்பெயர்தலின் சிறப்பும் அந்தஸ்தும் தெளிவாகிறது. info

• جواز العقاب بالمثل.
2. துன்புறுத்தப்பட்ட அளவே தண்டிக்க அனுமதியுள்ளது. info

• نصر الله للمُعْتَدَى عليه يكون في الدنيا أو الآخرة.
3. அநீதி இழைக்கப்பட்டவனுக்கு இவ்வுலகிலோ மறுவுலகிலோ அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். info

• إثبات الصفات العُلَا لله بما يليق بجلاله؛ كالعلم والسمع والبصر والعلو.
4. அறிவு, கேட்டல், பார்த்தல், உயர்வு போன்ற அல்லாஹ்வின் கண்ணியத்திற்கேற்ப உயர்வான பண்புகள் அவனுக்கு இருக்கின்றன என்று உறுதிப்படுத்தல். info