Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
81 : 21

وَلِسُلَیْمٰنَ الرِّیْحَ عَاصِفَةً تَجْرِیْ بِاَمْرِهٖۤ اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا ؕ— وَكُنَّا بِكُلِّ شَیْءٍ عٰلِمِیْنَ ۟

21.81. நாம் சுலைமானுக்கு வேகமாக வீசக்கூடிய காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவரது கட்டளைப்படி நாம் அருள்செய்திருந்த ஷாம் தேசத்திற்குச் செல்லும். அங்கு நபிமார்களை அனுப்பி பல நலவுகளை ஏற்படுத்தி அதில் அபிவிருத்தி செய்திருந்தோம். நாம் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவர்களாக இருக்கின்றோம். எதுவும் நம்மை விட்டு மறைவாக இல்லை. info
التفاسير:
Benefits of the verses in this page:
• فعل الخير والصلاة والزكاة، مما اتفقت عليه الشرائع السماوية.
1. நலவு செய்தல், தொழுகை, ஸகாத் ஆகியவற்றில் வானலோக ஷரீஅத்துகள் (மார்க்கங்கள்) ஒன்றுபட்டுள்ளன. info

• ارتكاب الفواحش سبب في وقوع العذاب المُسْتَأْصِل.
2. மானக்கேடான காரியங்களில் ஈடுபடுவது பூண்டோடு அழித்துவிடும் வேதனை நிகழ்வதற்கான ஒரு காரணமாகும். info

• الصلاح سبب في الدخول في رحمة الله.
3. நேர்மை இறையருளில் நுழைவதற்குக் காரணமாக இருக்கின்றது. info

• الدعاء سبب في النجاة من الكروب.
4. பிரார்த்தனை துன்பங்களிலிருந்து தப்புவதற்கான ஒரு காரணமாகும். info