Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
277 : 2

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟

2.277. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றி, நற்செயல்கள் புரிந்து, அல்லாஹ் விதித்தபடி தொழுகையை முழுமையாக நிறைவேற்றி, தங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தை உரியவர்களுக்கு அளிப்பவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் கூலி இருக்கின்றது. அவர்கள் எதிர்காலத்தில் நிகழக்கூடியவற்றை எண்ணி அச்சம்கொள்ள மாட்டார்கள்; உலகில் இழந்துவிட்டவற்றை எண்ணி கவலைகொள்ளவும் மாட்டார்கள். info
التفاسير:
Benefits of the verses in this page:
• من أعظم الكبائر أكل الربا، ولهذا توعد الله تعالى آكله بالحرب وبالمحق في الدنيا والتخبط في الآخرة.
1. வட்டி வாங்கி உண்பது மிகப் பெரிய பாவமாகும். எனவேதான் அதனை உண்பவர்களை அல்லாஹ் போர், உலகில் இழப்பு, மறுமையில் தடுமாற்றம் போன்றவற்றைின் மூலம் எச்சரிக்கிறான். info

• الالتزام بأحكام الشرع في المعاملات المالية ينزل البركة والنماء فيها.
2. பொருளாதார விஷயங்களில் அல்லாஹ்வின் சட்டங்களை முறையாகக் கடைப்பிடிப்பதால் அவற்றில் பரக்கத்தும் வளர்ச்சியும் ஏற்படுகிறது. info

• فضل الصبر على المعسر، والتخفيف عنه بالتصدق عليه ببعض الدَّين أو كله.
3. கடனை அடைக்கமுடியாமல் சிரமப்படுபவர் விடயத்தில் பொறுமைமேற்கொள்வதும் கடனை முழுமையாகவோ ஒரு பகுதியையோ தள்ளுபடி செய்து தர்மம் செய்வதும் சிறப்புக்குரியவைகளாகும். info