Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
120 : 2

وَلَنْ تَرْضٰی عَنْكَ الْیَهُوْدُ وَلَا النَّصٰرٰی حَتّٰی تَتَّبِعَ مِلَّتَهُمْ ؕ— قُلْ اِنَّ هُدَی اللّٰهِ هُوَ الْهُدٰی ؕ— وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِیْ جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ— مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟ؔ

2.120. அல்லாஹ் தன் தூதரை விளித்து அவருக்குப் பின்வருமாறு எச்சரிக்கிறான்: நீர் இஸ்லாத்தை விட்டுவிட்டு அவர்களது கொள்கையை பின்பற்றும் வரை யூதர்களோ, கிருஸ்தவர்களோ உம்மைக் குறித்து திருப்தியடைய மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வேதமும் அவனது தெளிவும்தான் உண்மையான நேர்வழியாகும். மாறாக அவர்களிருக்கும் அசத்தியமல்ல. தெளிவான சத்தியம் உம்மிடம் வந்தபிறகு உம்மிடமிருந்தோ, உம்மைப் பின்பற்றியவர்களிடமிருந்தோ இவ்வாறு நிகழ்ந்துவிட்டால் அல்லாஹ்விடமிருந்து எந்த உதவியையும் நீர் பெறமாட்டீர். இது சத்தியத்தை விட்டுவிட்டு அசத்தியவாதிகளோடு சேர்ந்துவிடுவதால் ஏற்படும் ஆபத்தை தெளிவுபடுத்துகிறது.
info
التفاسير:
Benefits of the verses in this page:
• أن المسلمين مهما فعلوا من خير لليهود والنصارى؛ فلن يرضوا حتى يُخرجوهم من دينهم، ويتابعوهم على ضلالهم.
1. முஸ்லிம்கள், யூதர்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும் எவ்வளவுதான் நன்மைகள் புரிந்தாலும் தங்களின் மார்க்கத்தை விட்டு அவர்கள் வெளியேறி யூதர்களின் மற்றும் கிருஸ்தவர்களின் வழியைப் பின்பற்றாதவரை அவர்களைக் குறித்து யூதர்களும் கிருஸ்தவர்களும் திருப்தியடைய மாட்டார்கள். info

• الإمامة في الدين لا تُنَال إلا بصحة اليقين والصبر على القيام بأمر الله تعالى.
2. சரியான நம்பிக்கை மற்றும் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் பொறுமையாக இருத்தல் ஆகியவற்றைக் கொண்டுதான் மார்க்கத் தலைமை பெறப்படுகிறது. info

• بركة دعوة إبراهيم عليه السلام للبلد الحرام، حيث جعله الله مكانًا آمنًا للناس، وتفضّل على أهله بأنواع الأرزاق.
3. புனித பூமி மக்காவுக்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் புரிந்த பிரார்த்தனை அருள்நிறைந்ததாகும். அதன் விளைவாக அல்லாஹ் மக்களுக்கு அதனை பாதுகாப்புமிக்கதாக ஆக்கி அங்கு வசிப்போருக்கு பலவித உணவுகளையும் வழங்கியுள்ளான். info