Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

Page Number:close

external-link copy
282 : 2

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَایَنْتُمْ بِدَیْنٍ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی فَاكْتُبُوْهُ ؕ— وَلْیَكْتُبْ بَّیْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ ۪— وَلَا یَاْبَ كَاتِبٌ اَنْ یَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ فَلْیَكْتُبْ ۚ— وَلْیُمْلِلِ الَّذِیْ عَلَیْهِ الْحَقُّ وَلْیَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا یَبْخَسْ مِنْهُ شَیْـًٔا ؕ— فَاِنْ كَانَ الَّذِیْ عَلَیْهِ الْحَقُّ سَفِیْهًا اَوْ ضَعِیْفًا اَوْ لَا یَسْتَطِیْعُ اَنْ یُّمِلَّ هُوَ فَلْیُمْلِلْ وَلِیُّهٗ بِالْعَدْلِ ؕ— وَاسْتَشْهِدُوْا شَهِیْدَیْنِ مِنْ رِّجَالِكُمْ ۚ— فَاِنْ لَّمْ یَكُوْنَا رَجُلَیْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَآءِ اَنْ تَضِلَّ اِحْدٰىهُمَا فَتُذَكِّرَ اِحْدٰىهُمَا الْاُخْرٰی ؕ— وَلَا یَاْبَ الشُّهَدَآءُ اِذَا مَا دُعُوْا ؕ— وَلَا تَسْـَٔمُوْۤا اَنْ تَكْتُبُوْهُ صَغِیْرًا اَوْ كَبِیْرًا اِلٰۤی اَجَلِهٖ ؕ— ذٰلِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَقْوَمُ لِلشَّهَادَةِ وَاَدْنٰۤی اَلَّا تَرْتَابُوْۤا اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً حَاضِرَةً تُدِیْرُوْنَهَا بَیْنَكُمْ فَلَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَلَّا تَكْتُبُوْهَا ؕ— وَاَشْهِدُوْۤا اِذَا تَبَایَعْتُمْ ۪— وَلَا یُضَآرَّ كَاتِبٌ وَّلَا شَهِیْدٌ ؕ۬— وَاِنْ تَفْعَلُوْا فَاِنَّهٗ فُسُوْقٌ بِكُمْ ؕ— وَاتَّقُوا اللّٰهَ ؕ— وَیُعَلِّمُكُمُ اللّٰهُ ؕ— وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟

2.282. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்களில் ஒருவர் மற்றவருக்கு தவணை வழங்கி கடனளித்தால் அதனை எழுதிக் கொள்ளுங்கள். உங்களில் எழுதுபவர் மார்க்கத்தின்படி உண்மையாகவும் நியாயமாகவும் எழுதிக் கொள்ளட்டும். எழுதக்கூடியவர் அல்லாஹ் கற்றுத் தந்தவாறு நியாயமாக எழுதுவதை தவிர்ந்துகொள்ள வேண்டாம். கடனாளி சொல்வதை இவர் எழுதட்டும். அப்பொழுதுதான் அவர் அங்கீகரித்ததாக ஆகும். அவரும் தம் இறைவனை அஞ்சி கடனாக அளிக்கப்பட்ட பொருளின் வகையிலோ அளவிலோ அமைப்பிலோ எந்தக் குறைவும் செய்துவிட வேண்டாம். கடனாளி விவகாரங்களை நிர்வகிக்கத் தெரியாதவராகவோ சிறுவயது அல்லது மனப்பிறழ்வின் காரணமாக பலவீனராகவோ ஊமையாகவோ இருந்தால் அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் நியாயமாக வாசகம் சொல்லட்டும். நியாயமாக சாட்சிசொல்லக்கூடிய இரு அறிவுள்ள ஆண் சாட்சிகளை தேடிக்கொள்ளுங்கள். இரு ஆண் சாட்சிகளை நீங்கள் பெறவில்லையெனில் ஒரு ஆண் சாட்சியையும் நம்பகப்பூர்வமான இரு பெண் சாட்சிகளையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்களில் ஒருத்தி மறந்துவிட்டால் இன்னொருத்தி நினைவூட்டுவாள். கடனுக்கு சாட்சியாக இருப்பதற்கு அழைக்கப்பட்டால் சாட்சிகள் மறுக்க வேண்டாம். சாட்சி கூறுமாறு வேண்டப்பட்டால் சாட்சிபகர்வது அவர்கள் மீது கடமையாகும். கடன் சிறியதோ பெரியதோ அதனை குறித்த தவணை வரை எழுதி வைப்பதைவிட்டும் நீங்கள் சடைந்து விடாதீர்கள். கடனை எழுதி வைத்துக் கொள்வதே அல்லாஹ்வின் மார்க்கத்தில் நியாயமானதும் நேர்த்தியான சாட்சியத்துக்கு வழிவகுப்பதுமாகும்; கடனின் வகை, அளவு, காலம் போன்றவற்றைக் குறித்து ஏற்படும் சந்தேகங்களைப் போக்குவதற்கு மிகவும் ஏற்றது. ஆயினும் உங்களிடையே உடனடியாக நடைபெறும் வியாபாரமாக இருந்தாலே தவிர. அவசியமில்லை என்பதனால் அதனை எழுதிக் கொள்ளாமல் இருப்பதால் எந்தப் பிரச்சனையும் இல்லை. கருத்து வேறுபாட்டிற்கான காரணிகளை நீக்குவதற்கு அவன் சாட்சிகளை ஏற்படுத்துவதை விதித்துள்ளான். எனவே சாட்சி கூறக்கூடியவர்களோ எழுதக்கூடியவர்களோ ஒருபோதும் துன்புறுத்தப்படக்கூடாது. அவ்வாறு அவர்கள் துன்புறுத்தப்படுவது பாவமாகும். நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டதைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் பலனளிப்பவற்றை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருகின்றான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. info
التفاسير:
Benefits of the verses in this page:
• وجوب تسمية الأجل في جميع المداينات وأنواع الإجارات.
1. கடன் மற்றும் அனைத்து பொருளாதார விஷயங்களையும் முறையாக எழுதிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது கருத்து வேறுபாடுகளையும் பிரச்சனைகளையும் தடுக்கிறது. info

3. இயலாமை, புத்தி குறைபாடு, சிறுவயது போன்ற காரணங்களினால் இயலாதோராக இருப்போரைப் பொறுப்பேற்றுக்கொள்ளலாம். info

4. கடன்கள், உரிமைகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். info

5. எழுதக்கூடியவர் ஒவ்வொரு விவகாரத்திலும் சூழ்நிலைக்கேற்ப சிறந்த வாசகங்களையும் முறையான வார்த்தைகளையும் எழுத வேண்டும். அதுவே நீதியான மற்றும் பூரணமான பதிவாகும். info

6. உரிமைகளை எழுதி ஆவணப்படுத்துவதைக் காரணமாக வைத்து எவரும் துன்புறுத்தப்படக் கூடாது. உரிமையாளர்களோ சாட்சிகளோ எழுதக்கூடியவர்களோ அவ்வாறு செய்வது கூடாது. info