Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
11 : 16

یُنْۢبِتُ لَكُمْ بِهِ الزَّرْعَ وَالزَّیْتُوْنَ وَالنَّخِیْلَ وَالْاَعْنَابَ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟

16.11. அந்த நீரைக்கொண்டு நீங்கள் உண்ணும் பயிர்களையும் ஸைதூன், பேரீச்சை, திராட்சை இன்னும் எல்லா வகையான பழங்களையும் அல்லாஹ் உங்களுக்காக முளைக்கச் செய்கிறான். அந்த நீரிலும் அதிலிருந்து விளையக் கூடியவைகளிலும் அல்லாஹ்வின் படைப்பைச் சிந்தித்து அதன் மூலம் அவனது மகத்துவத்தைப் புரிந்து கொள்ளும் மக்களுக்கு அவனது வல்லமையை அறிவிக்கக்கூடிய அத்தாட்சிகள் இருக்கின்றன. info
التفاسير:
Benefits of the verses in this page:
• من عظمة الله أنه يخلق ما لا يعلمه جميع البشر في كل حين يريد سبحانه.
1.அல்லாஹ் தான் நாடும் பொழுதெல்லாம் எந்த மனிதனும் அறியாததைப் படைப்பது அல்லாஹ்வின் மகத்துவத்தில் உள்ளதாகும். info

• خلق الله النجوم لزينة السماء، والهداية في ظلمات البر والبحر، ومعرفة الأوقات وحساب الأزمنة.
2. அல்லாஹ் நட்சத்திரங்களை வானத்தின் அலங்காரத்திற்காகவும், தரை மற்றும் கடலின் இருள்களில் வழிகளை அறிந்து கொள்வதற்காகவும், நேரங்களை அறிந்து, காலங்களை கணக்கிட்டுக் கொள்வதற்காகவும் படைத்துள்ளான். info

• الثناء والشكر على الله الذي أنعم علينا بما يصلح حياتنا ويعيننا على أفضل معيشة.
3. நமது வாழ்வைச் சீராக்கி சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு நமக்கு உதவி புரியும் வகையில் நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவனை புகழ்தல். info

• الله سبحانه أنعم علينا بتسخير البحر لتناول اللحوم (الأسماك)، واستخراج اللؤلؤ والمرجان، وللركوب، والتجارة، وغير ذلك من المصالح والمنافع.
,4. மீன்களைச் சாப்பிடவும், முத்து பவளம் என்பவற்றைப் பெறவும், பயணம் செய்யவும், வியாபாரத்திற்காகவும், இன்னும் பல்வேறு நலன்கள் பயன்களுக்காகவும் கடலை வசப்படுத்தி எமக்கு அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். info