Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
94 : 10

فَاِنْ كُنْتَ فِیْ شَكٍّ مِّمَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ فَسْـَٔلِ الَّذِیْنَ یَقْرَءُوْنَ الْكِتٰبَ مِنْ قَبْلِكَ ۚ— لَقَدْ جَآءَكَ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِیْنَ ۟ۙ

10.94. -தூதரே!- நாம் உம்மீது இறக்கிய குர்ஆனின் உண்மை நிலையைக் குறித்து நீர் சந்தேகத்தில் இருந்தீரானால் தவ்ராத்தையும் இன்ஜீலையும் படித்துக் கொண்டிருந்த யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களில் நம்பிக்கை கொண்டவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் தங்களின் வேதங்களில் உம்மீது இறக்கப்பட்டதைக் குறித்து கூறப்பட்டுள்ளதைக் கண்டதனால் உம்மீது இறக்கப்பட்டது சத்தியமே என்பதை அவர்கள் உமக்கு கூறுவார்கள். சந்தேகமற்ற சத்தியம் உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்துள்ளது. எனவே சந்தேகம் கொள்வோரில் ஒருவராகிவிடாதீர். info
التفاسير:
Benefits of the verses in this page:
• وجوب الثبات على الدين، وعدم اتباع سبيل المجرمين.
1. குற்றவாளிகளின் பாதையைப் பின்பற்றாமல் மார்க்கத்தில் நிலைத்திருப்பது கட்டாயமாகும். info

• لا تُقْبل توبة من حَشْرَجَت روحه، أو عاين العذاب.
2. உயிர் தொண்டைக் குழியை அடைந்த பிறகு அல்லது வேதனையைக் கண்ட பிறகு பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாது. info

• أن اليهود والنصارى كانوا يعلمون صفات النبي صلى الله عليه وسلم، لكن الكبر والعناد هو ما منعهم من الإيمان.
3. யூதர்களும் கிறிஸ்தவர்களும் நபியவர்களின் பண்புகளைக் குறித்து அறிந்திருந்தார்கள். கர்வமும் பிடிவாதமுமே அவர்களை நம்பிக்கை கொள்ளவிடாமல் தடுத்தது. info