Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation - Abdulhamid Albaqoi

Page Number:close

external-link copy
62 : 3

اِنَّ هٰذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ ۚ— وَمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ ؕ— وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

62. நிச்சயமாக இதுதான் உண்மை வரலாறு. வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் (இல்லவே) இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான். info
التفاسير:

external-link copy
63 : 3

فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِالْمُفْسِدِیْنَ ۟۠

63. (நபியே! இதற்குப் பின்னரும் உம்மை நம்பிக்கை கொள்ளாமல்) அவர்கள் புறக்கணிப்பார்களேயானால், நிச்சயமாக அல்லாஹ் (இந்த) விஷமிகளை நன்கறிவான். info
التفاسير:

external-link copy
64 : 3

قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ تَعَالَوْا اِلٰی كَلِمَةٍ سَوَآءٍ بَیْنَنَا وَبَیْنَكُمْ اَلَّا نَعْبُدَ اِلَّا اللّٰهَ وَلَا نُشْرِكَ بِهٖ شَیْـًٔا وَّلَا یَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ ؕ— فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ ۟

64. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்கமாட்டோம். நாம் அவனுக்கு எதையும் இணையாக்கமாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வைத் தவிர எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ளமாட்டோம்'' (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதையும்) அவர்கள் புறக்கணித்தால் ‘‘நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அவன் ஒருவனுக்கே வழிப்பட்டவர்கள்) என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள். info
التفاسير:

external-link copy
65 : 3

یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَآجُّوْنَ فِیْۤ اِبْرٰهِیْمَ وَمَاۤ اُنْزِلَتِ التَّوْرٰىةُ وَالْاِنْجِیْلُ اِلَّا مِنْ بَعْدِهٖ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟

65. வேதத்தையுடையவர்களே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோதான் இருந்தார் என்று) ஏன் வீணே தர்க்கம் செய்து கொள்கிறீர்கள். (யூதர்களுடைய வேதமாகிய) தவ்றாத்தும், (கிறிஸ்தவர்களுடைய வேதமாகிய) இன்ஜீலும் அவருக்கு (வெகு காலத்திற்குப்) பின்னரே அருளப்பட்டன. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? info
التفاسير:

external-link copy
66 : 3

هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ حَاجَجْتُمْ فِیْمَا لَكُمْ بِهٖ عِلْمٌ فَلِمَ تُحَآجُّوْنَ فِیْمَا لَیْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟

66. நீங்கள் கொஞ்சம் அறிந்த விஷயத்தில் வீணாக இதுவரை தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஒரு சிறிதும் அறியாத விஷயத்திலும் ஏன் தர்க்கிக்க முன்வந்துவிட்டீர்கள். அல்லாஹ்தான் (இவை அனைத்தையும்) நன்கறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். info
التفاسير:

external-link copy
67 : 3

مَا كَانَ اِبْرٰهِیْمُ یَهُوْدِیًّا وَّلَا نَصْرَانِیًّا وَّلٰكِنْ كَانَ حَنِیْفًا مُّسْلِمًا ؕ— وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟

67. இப்றாஹீம் யூதராகவும் இருக்கவில்லை, கிறிஸ்தவராகவும் இருக்கவில்லை. எனினும், இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட நேரான கொள்கையுடைய முஸ்லிமாகவே இருந்தார். மேலும், அவர் இணைவைத்து வணங்குபவராகவும் இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
68 : 3

اِنَّ اَوْلَی النَّاسِ بِاِبْرٰهِیْمَ لَلَّذِیْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِیُّ وَالَّذِیْنَ اٰمَنُوْا ؕ— وَاللّٰهُ وَلِیُّ الْمُؤْمِنِیْنَ ۟

68. நிச்சயமாக இப்ராஹீமுக்கு மனிதர்களில் நெருங்கியவர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இவரை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் இந்த நம்பிக்கையாளர்களை (நேசித்து) பாதுகாப்பான். info
التفاسير:

external-link copy
69 : 3

وَدَّتْ طَّآىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ یُضِلُّوْنَكُمْ ؕ— وَمَا یُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟

69. வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தார் உங்களை வழி கெடுத்திட விரும்புகிறார்கள். அவர்கள் தங்களையே தவிர (உங்களை) வழி கெடுத்து விட முடியாது. (இதை) அவர்கள் உணர்வதில்லை. info
التفاسير:

external-link copy
70 : 3

یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَاَنْتُمْ تَشْهَدُوْنَ ۟

70. வேதத்தையுடையவர்களே! நீங்கள் (பல அத்தாட்சிகளைக்) கண்டதன் பின்னரும், அல்லாஹ்வுடைய வசனங்களை ஏன் நிராகரிக்கிறீர்கள்? info
التفاسير: