Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Tamilische Übersetzung - Omar Sharif

அல்பத்ஹ்

external-link copy
1 : 48

اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِیْنًا ۟ۙ

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு தெளிவான வெற்றியை வழங்கினோம். info
التفاسير:

external-link copy
2 : 48

لِّیَغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَمَا تَاَخَّرَ وَیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْكَ وَیَهْدِیَكَ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ۙ

அல்லாஹ் உமது பாவத்தில் முந்தியதையும் (பழையதையும்) பிந்தியதையும் (புதியதையும்) உமக்கு மன்னிப்பதற்காகவும் அவனது அருளை உம் மீது முழுமைப்படுத்துவதற்காகவும் உமக்கு நேரான பாதையை வழி காண்பிப்பதற்காகவும், info
التفاسير:

external-link copy
3 : 48

وَّیَنْصُرَكَ اللّٰهُ نَصْرًا عَزِیْزًا ۟

அல்லாஹ் உமக்கு மிக கம்பீரமான (மிகப்பெரிய) உதவியை செய்வதற்காகவும் (உமக்கு மகத்தான தெளிவான வெற்றியை அளித்தோம்). info
التفاسير:

external-link copy
4 : 48

هُوَ الَّذِیْۤ اَنْزَلَ السَّكِیْنَةَ فِیْ قُلُوْبِ الْمُؤْمِنِیْنَ لِیَزْدَادُوْۤا اِیْمَانًا مَّعَ اِیْمَانِهِمْ ؕ— وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟ۙ

அவன்தான் நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் அமைதியை (நிம்மதியை) இறக்கினான், அவர்கள் (முன்னர் இறக்கப்பட்ட சட்டங்களை நம்பிக்கை கொண்டும் செயல்படுத்தியும் வந்த) தங்கள் நம்பிக்கையுடன் (புதிதாக இறக்கப்பட்ட சட்டங்களையும் நம்பிக்கை கொண்டு, செயல்படுத்தி) மேலும் நம்பிக்கை அதிகரிப்பதற்காக (அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கினான்). வானங்கள் இன்னும் பூமியின் இராணுவங்கள் அல்லாஹ்விற்கே உரியன. அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
5 : 48

لِّیُدْخِلَ الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا وَیُكَفِّرَ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ ؕ— وَكَانَ ذٰلِكَ عِنْدَ اللّٰهِ فَوْزًا عَظِیْمًا ۟ۙ

நம்பிக்கைகொண்ட ஆண்களையும், நம்பிக்கைகொண்ட பெண்களையும் சொர்க்கங்களில் அவன் பிரவேசிக்க வைப்பதற்காகவும் அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை போக்கிவிடுவதற்காகவும் (அவன் உமக்கு மகத்தான வெற்றியை கொடுத்தான்). அவற்றின் கீழ் (அந்த சொர்க்கங்களில் உள்ள மரங்களையும் கட்டிடங்களையும் சுற்றி) நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாகத் தங்குவார்கள். இதுதான் அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக (- நற்பாக்கியமாக) இருக்கிறது. info
التفاسير:

external-link copy
6 : 48

وَّیُعَذِّبَ الْمُنٰفِقِیْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِیْنَ وَالْمُشْرِكٰتِ الظَّآنِّیْنَ بِاللّٰهِ ظَنَّ السَّوْءِ ؕ— عَلَیْهِمْ دَآىِٕرَةُ السَّوْءِ ۚ— وَغَضِبَ اللّٰهُ عَلَیْهِمْ وَلَعَنَهُمْ وَاَعَدَّ لَهُمْ جَهَنَّمَ ؕ— وَسَآءَتْ مَصِیْرًا ۟

இன்னும், நயவஞ்சகம் உடைய ஆண்களையும் நயவஞ்சகம் உடைய பெண்களையும் இணைவைக்கின்ற ஆண்களையும் இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் தண்டிப்பதற்காக (அவன் உமக்கு மகத்தான வெற்றியை கொடுத்தான்). அவர்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் (அவன் தனது நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உதவமாட்டான் என்று) கெட்ட எண்ணம் எண்ணுகிறார்கள். அவர்கள் மீதுதான் கெட்ட சுழற்சி (சுற்ற) இருக்கிறது. (-அவர்கள்தான் தோற்கப் போகிறார்கள். நம்பிக்கையாளர்களின் கரத்தால் தண்டனையை சுவைக்க இருக்கிறார்கள்.) இன்னும், அல்லாஹ் அவர்கள் மீது கோபப்படுகிறான். அவர்களை சபிக்கிறான். அவர்களுக்கு நரகத்தை தயார் செய்திருக்கிறான். அது மிகக் கெட்ட மீளுமிடமாகும். info
التفاسير:

external-link copy
7 : 48

وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟

வானங்கள், இன்னும் பூமியின் இராணுவங்கள் அல்லாஹ்விற்கே உரியன. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
8 : 48

اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِیْرًا ۟ۙ

நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிப்பவராகவும் அனுப்பினோம், info
التفاسير:

external-link copy
9 : 48

لِّتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُعَزِّرُوْهُ وَتُوَقِّرُوْهُ ؕ— وَتُسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِیْلًا ۟

நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வதற்காகவும் அவரை கண்ணியப்படுத்துவதற்காகவும் அவரை மதிப்பதற்காகவும் அ(ந்த இறை)வனை காலையிலும் மாலையிலும் புகழ்ந்து துதித்து வணங்குவதற்காகவும் (அவன் தனது தூதரை உங்களிடம் அனுப்பினான்). info
التفاسير: