Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Tamilische Übersetzung - Omar Sharif

அல்அன்பியா

external-link copy
1 : 21

اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِیْ غَفْلَةٍ مُّعْرِضُوْنَ ۟ۚ

மக்களுக்கு அவர்களின் விசாரணை (நாள்) நெருங்கி வருகிறது. அவர்களோ மறதியில் இருக்கிறார்கள், (நமது எச்சரிக்கையை) புறக்கணிக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
2 : 21

مَا یَاْتِیْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنْ رَّبِّهِمْ مُّحْدَثٍ اِلَّا اسْتَمَعُوْهُ وَهُمْ یَلْعَبُوْنَ ۟ۙ

அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய அறிவுரை ஏதும் அவர்களுக்கு வந்தால் அவர்களோ விளையாடியவர்களாக இருக்கும் நிலையில் அதை செவியுறுகிறார்கள். info
التفاسير:

external-link copy
3 : 21

لَاهِیَةً قُلُوْبُهُمْ ؕ— وَاَسَرُّوا النَّجْوَی ۖۗ— الَّذِیْنَ ظَلَمُوْا ۖۗ— هَلْ هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۚ— اَفَتَاْتُوْنَ السِّحْرَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ ۟

அவர்களது உள்ளங்கள் மறதியில் இருக்கின்றன. (இணைவைக்கின்ற) அநியாயக்காரர்கள் (நமது நபியை குறித்து அவர்கள் என்ன சொல்ல வேண்டுமென்று தங்களுக்கு மத்தியில் ஒருமித்து முடிவு செய்த) பேச்சை (வெளியில்) பகிரங்கப்படுத்தி பேசினார்கள். (அதாவது, நபியவர்களை சுட்டிக்காண்பித்து) “இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர வேறில்லை. (மக்களே!) நீங்கள் (இதை) அறிந்துகொண்டே (அவர் ஓதுகிற) சூனியத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?” (என்று வெளிப்படையாக கேட்டனர்.) info
التفاسير:

external-link copy
4 : 21

قٰلَ رَبِّیْ یَعْلَمُ الْقَوْلَ فِی السَّمَآءِ وَالْاَرْضِ ؗ— وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟

(நபி) கூறினார்: என் இறைவன் வானத்திலும் பூமியிலும் உள்ள பேச்சுகளை அறிகிறான். அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கு அறிபவன். info
التفاسير:

external-link copy
5 : 21

بَلْ قَالُوْۤا اَضْغَاثُ اَحْلَامٍ بَلِ افْتَرٰىهُ بَلْ هُوَ شَاعِرٌ ۖۚ— فَلْیَاْتِنَا بِاٰیَةٍ كَمَاۤ اُرْسِلَ الْاَوَّلُوْنَ ۟

மாறாக, (அவர்களில் சிலர்) கூறினார்கள்: “(இது) பயமுறுத்துகின்ற கனவுகள்.” (மற்றும் சிலர் கூறினார்கள்:) “மாறாக, (முஹம்மத் இறைவன் மீது) இதை பொய்யாக இட்டுக்கட்டுகிறார்.” (வேறு சிலர் கூறினார்கள்): “மாறாக, இவர் ஒரு கவிஞர்.” “ஆகவே, முதலாமவர்கள் (முந்திய தூதர்கள்) அனுப்பப்பட்டது போன்று அவரும் எங்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரட்டும்.” (என்று அவர்கள் கூறுகிறார்கள்). info
التفاسير:

external-link copy
6 : 21

مَاۤ اٰمَنَتْ قَبْلَهُمْ مِّنْ قَرْیَةٍ اَهْلَكْنٰهَا ۚ— اَفَهُمْ یُؤْمِنُوْنَ ۟

இவர்களுக்கு முன்னர், (அத்தாட்சியைக் கேட்ட) எந்த சமுதாயமும் (அந்த அத்தாட்சி வந்த பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. ஆகவே, அவர்களை (எல்லாம்) நாம் அழித்தோம். எனவே, (மக்காவாசிகளாகிய) இவர்கள் (மட்டும்) (நமது அத்தாட்சிகள் அவர்களிடம் வந்தால் அவற்றை அவர்கள்) நம்பிக்கை கொள்வார்களா? info
التفاسير:

external-link copy
7 : 21

وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ اِلَّا رِجَالًا نُّوْحِیْۤ اِلَیْهِمْ فَسْـَٔلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟

உமக்கு முன்னர் நாம் (மனிதர்களான) ஆடவர்களைத் தவிர (வானவர்களை) தூதர்களாக அனுப்பவில்லை. அ(ந்த ஆட)வர்களுக்கு நாம் வஹ்யி அறிவித்தோம். ஆகவே, (மக்காவாசிகளே) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (முந்திய) வேதக்காரர்களிடம் நீங்கள் விசாரியுங்கள், info
التفاسير:

external-link copy
8 : 21

وَمَا جَعَلْنٰهُمْ جَسَدًا لَّا یَاْكُلُوْنَ الطَّعَامَ وَمَا كَانُوْا خٰلِدِیْنَ ۟

நாம் அ(ந்த தூது)வர்களை உணவு சாப்பிடாத உடல்களாக (-வானவர்களாக) ஆக்கவில்லை. இன்னும், அவர்கள் (மரணமில்லாத) நிரந்தரமானவர்களாகவும் இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
9 : 21

ثُمَّ صَدَقْنٰهُمُ الْوَعْدَ فَاَنْجَیْنٰهُمْ وَمَنْ نَّشَآءُ وَاَهْلَكْنَا الْمُسْرِفِیْنَ ۟

பிறகு, நாம் அ(ந்த தூது)வர்களுக்கு (நமது) வாக்கை உண்மைப்படுத்தினோம். ஆக, நாம் அ(ந்த தூது)வர்களையும் நாம் நாடியவர்களையும் பாதுகாத்தோம். இன்னும், (நிராகரிப்பில்) எல்லை மீறியவர்களை நாம் அழித்தோம். info
التفاسير:

external-link copy
10 : 21

لَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكُمْ كِتٰبًا فِیْهِ ذِكْرُكُمْ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠

திட்டமாக நாம் உங்களுக்கு ஒரு வேதத்தை இறக்கி இருக்கிறோம். அ(தைப் பின்பற்றுவ)தில் உங்கள் கண்ணியம் இருக்கிறது. நீங்கள் சிந்தித்துப் புரிய வேண்டாமா? info
التفاسير: