Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans

external-link copy
128 : 6

وَیَوْمَ یَحْشُرُهُمْ جَمِیْعًا ۚ— یٰمَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِّنَ الْاِنْسِ ۚ— وَقَالَ اَوْلِیٰٓؤُهُمْ مِّنَ الْاِنْسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَّبَلَغْنَاۤ اَجَلَنَا الَّذِیْۤ اَجَّلْتَ لَنَا ؕ— قَالَ النَّارُ مَثْوٰىكُمْ خٰلِدِیْنَ فِیْهَاۤ اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ— اِنَّ رَبَّكَ حَكِیْمٌ عَلِیْمٌ ۟

6.128. தூதரே! அல்லாஹ் மனித, ஜின் இனங்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளை நினைவுகூர்வீராக. பின்னர் அல்லாஹ் அவர்களிடம் கூறுவான்: “ஜின் சமூகமே! நீங்கள் ஏராளமான மனிதர்களை வழிகெடுத்து அல்லாஹ்வின் பாதையைவிட்டும் அவர்களைத் தடுத்துவிட்டீர்கள்” அவர்களைப் பின்பற்றிய மனிதர்கள் தங்கள் இறைவனிடம் பதிலளித்தவாறு கூறுவார்கள், “எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக் கொண்டு பயனடைந்தோம் (மனிதனின் கீழ்ப்படிதலைக் கொண்டு ஜின்கள் பயனடைந்தன. தங்களின் மனஇச்சையை நிறைவேற்றியதைக் கொண்டு மனிதர்கள் பயனடைந்தனர்) நீ எங்களுக்கு நிர்ணயித்த தவணையையும் நாங்கள் அடைந்துவிட்டோம். இது மறுமை நாளாகும்.” அல்லாஹ் கூறுவான்: “நரகம்தான் உங்களின் தங்குமிடமாகும். அல்லாஹ் நாடிய காலத்தைத் தவிர இங்கு நீங்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பீர்கள்,” நரகத்தில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் என்பதிலிருந்து அளிக்கப்பட்ட விதிவிலக்கு, தமது அடக்கஸ்தலத்திலிருந்து நரகம் செல்லும் வரைக்கும் உள்ள காலமாகும். தூதரே! உம் இறைவன் தான் நிர்ணயித்த விதிகளில், தன் நிர்வாகத்தில் ஞானம்மிக்கவன். தன் அடியார்களையும் அவர்களில் யார் வேதனைக்குத் தகுதியானவர்கள் என்பதையும் அவன் நன்கறிந்தவன். info
التفاسير:
Die Nutzen der Versen in dieser Seite:
• سُنَّة الله في الضلال والهداية أنهما من عنده تعالى، أي بخلقه وإيجاده، وهما من فعل العبد باختياره بعد مشيئة الله.
1. நேர்வழி மற்றும் வழிகேடு என்பவை அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படியே நிகழ்கின்றன. அல்லாஹ்வின் நாட்டத்திற்குப் பிறகே மனிதனது தேர்வின் மூலம் அவனது செயலாகக் கணிக்கப்படும். இதுவே அல்லாஹ்வின் வழிமுறை. info

• ولاية الله للمؤمنين بحسب أعمالهم الصالحة، فكلما زادت أعمالهم الصالحة زادت ولايته لهم والعكس.
2. நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் நற்செயல்களுக்கேற்பவே அல்லாஹ்வின் நேசம் கிடைக்கிறது. அவர்களின் நற்செயல்கள் அதிகரிக்கும் போதெல்லாம் அவனுடைய நேசமும் அதிகமாகிறது. நற்செயல்கள் குறைந்தால் நேசமும் குறையும். info

• من سُنَّة الله أن يولي كل ظالم ظالمًا مثله، يدفعه إلى الشر ويحثه عليه، ويزهِّده في الخير وينفِّره عنه.
3. அல்லாஹ் அநியாயக்காரர்களை ஒருவரோடு ஒருவர் இணைத்து விடுகிறான். அவர்கள் ஒருவருக்கொருவர் தீமைகளை செய்யத் தூண்டுவதோடு, நற்செயல்களில் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றனர். அதை விட்டும் தூரமாக்கியும் விடுகின்றனர். info