Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans

external-link copy
47 : 20

فَاْتِیٰهُ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلَا رَبِّكَ فَاَرْسِلْ مَعَنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۙ۬— وَلَا تُعَذِّبْهُمْ ؕ— قَدْ جِئْنٰكَ بِاٰیَةٍ مِّنْ رَّبِّكَ ؕ— وَالسَّلٰمُ عَلٰی مَنِ اتَّبَعَ الْهُدٰی ۟

20.47. நீங்கள் இருவரும் அவனிடம் சென்று அவனிடம் கூறுங்கள்: “-ஃபிர்அவ்னே!- நாங்கள் இருவரும் உம் இறைவனின் தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பிவிடும். அவர்களின் ஆண்மக்களைக் கொலைசெய்து பெண்மக்களை உயிருடன் விட்டுவிட்டு அவர்களை வேதனைக்குள்ளாக்காதீர். நாங்கள் உண்மையாளர்கள் என்பதைக் காட்டுவதற்காக உம் இறைவனிடமிருந்து சான்றினைக் கொண்டு வந்துள்ளோம். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றியவருக்கு அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து பாதுகாப்பு உண்டு. info
التفاسير:
Die Nutzen der Versen in dieser Seite:
• كمال اعتناء الله بكليمه موسى عليه السلام والأنبياء والرسل، ولورثتهم نصيب من هذا الاعتناء على حسب أحوالهم مع الله.
1. அல்லாஹ் மூஸா மற்றும் இறைத்தூதர்கள், நபிமார்கள் மீது கொண்ட பரிபூரண அக்கறை வெளிப்படுகிறது. அவர்களது வாரிசுகள் அல்லாஹ்வுடன் நடந்துகொள்வதற்கு ஏற்ப அவர்களுக்கும் இந்த அக்கறையில் பங்கு உண்டு. info

• من الهداية العامة للمخلوقات أن تجد كل مخلوق يسعى لما خلق له من المنافع، وفي دفع المضار عن نفسه.
2. ஒவ்வொரு படைப்பும் தான் படைக்கப்பட்ட நலவுகளுக்காகப் பாடுபடுவதோடு, தன்னை விட்டும் தீங்கை அகற்றுவதற்கும் முயற்சி செய்வது, படைப்பினங்களுக்குரிய பொது வழிகாட்டலைச் சார்ந்ததாகும். info

• بيان فضيلة الأمر بالمعروف والنهي عن المنكر، وأن ذلك يكون باللين من القول لمن معه القوة، وضُمِنَت له العصمة.
3. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதன் சிறப்பு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக இது சக்தி (அதிகாரம்) உள்ளவர்களிடம் மென்மையான வார்த்தையில்தான் எடுத்துரைக்கப்பட வேண்டும். நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது. info

• الله هو المختص بعلم الغيب في الماضي والحاضر والمستقبل.
4. இறந்த, நிகழ், எதிர் காலத்திலுள்ள மறைவானவற்றை அறிவதில் அல்லாஹ் மாத்திரமே விசேடமானவன். info