Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans

external-link copy
257 : 2

اَللّٰهُ وَلِیُّ الَّذِیْنَ اٰمَنُوْا یُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ۬— وَالَّذِیْنَ كَفَرُوْۤا اَوْلِیٰٓـُٔهُمُ الطَّاغُوْتُ یُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَی الظُّلُمٰتِ ؕ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠

2.257. தன்மீது நம்பிக்கைகொண்டவர்களை அல்லாஹ் பொறுப்பெடுத்துக் கொள்கிறான். அவர்களுக்கு நன்மை செய்வதற்கான பாக்கியம் அளித்து, உதவியும் புரிகிறான். நிராகரிப்பு, அறியாமை என்னும் இருள்களிலிருந்து அவர்களை வெளியேற்றி அறிவு மற்றும் ஈமானிய ஒளியின்பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுகிறான். அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்கு அல்லாஹ்வுக்கு இணையாக்கப்பட்டவர்களும் சிலைகளுமே பொறுப்பாளர்களாவர். அவர்கள் நிராகரிப்பை அலங்கரித்துக் காட்டி இவர்களை அறிவு மற்றும் ஈமானிய ஒளியிலிருந்து வெளியேற்றி அறியாமை மற்றும் நிராகரிப்பின் இருள்களுக்குள் கொண்டுசெல்கிறார்கள். இவர்கள்தாம் நரகவாசிகள். அங்கு நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். info
التفاسير:
Die Nutzen der Versen in dieser Seite:
• من أعظم ما يميز أهل الإيمان أنهم على هدى وبصيرة من الله تعالى في كل شؤونهم الدينية والدنيوية، بخلاف أهل الكفر.
1. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்கள் அவனை நிராகரித்தவர்களுக்கு மாறாக தங்களின் உலக மற்றும் மார்க்க விவகாரங்கள் அனைத்திலும் அவனிடமிருந்துள்ள வழிகாட்டலையும் தெளிவையும் பெற்றுள்ளார்கள். info

• من أعظم أسباب الطغيان الغرور بالقوة والسلطان حتى يعمى المرء عن حقيقة حاله.
2. தன் திறமையையும் அதிகாரத்தையும் கொண்டு கர்வம்கொள்வது வரம்புமீறுவதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும். அது உண்மை நிலையை அறியவிடாமல் மனிதனைக் குருடாக்கிவிடுகிறது. info

• مشروعية مناظرة أهل الباطل لبيان الحق، وكشف ضلالهم عن الهدى.
3. சத்தியத்தை எடுத்துரைத்து அசத்தியவாதிகளின் வழிகேட்டைத் தெளிவுபடுத்துவதற்காக அவர்களுடன் விவாதம் புரிய அனுமதி உண்டு. info

• عظم قدرة الله تعالى؛ فلا يُعْجِزُهُ شيء، ومن ذلك إحياء الموتى.
4. எதுவும் இயலாததல்ல எனுமளவுக்கு அல்லாஹ்வின் ஆற்றல் அளப்பெரியது. அவற்றில் ஒன்றுதான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதாகும். info