Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Tamilische Übersetzung - Abdulhamid Albaqoi

Nummer der Seite:close

external-link copy
85 : 28

اِنَّ الَّذِیْ فَرَضَ عَلَیْكَ الْقُرْاٰنَ لَرَآدُّكَ اِلٰی مَعَادٍ ؕ— قُلْ رَّبِّیْۤ اَعْلَمُ مَنْ جَآءَ بِالْهُدٰی وَمَنْ هُوَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

85. (நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனின் கட்டளைகளை உம் மீது விதித்து இருக்கிறானோ அவன் நிச்சயமாக உம்மை (மக்காவாகிய) உமது இல்லத்தில் திரும்பச் சேர்த்து வைப்பான். ஆகவே, (நபியே!) கூறுவீராக: நேரான வழியைக் கொண்டு வந்தவர் யார்? (அதை மறுத்துப்) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை என் இறைவன் நன்கறிவான். info
التفاسير:

external-link copy
86 : 28

وَمَا كُنْتَ تَرْجُوْۤا اَنْ یُّلْقٰۤی اِلَیْكَ الْكِتٰبُ اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ ظَهِیْرًا لِّلْكٰفِرِیْنَ ۟ؗ

86. (நபியே!) இவ்வேதம் உமக்குக் கொடுக்கப்படும் என்று நீர் எதிர்பார்த்திருக்கவில்லை. எனினும் உமது இறைவனின் அருளினால்தான் (இது உமக்கு கொடுக்கப்பட்டது). ஆகவே, நிச்சயமாக நீர் நிராகரிப்பவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டாம். info
التفاسير:

external-link copy
87 : 28

وَلَا یَصُدُّنَّكَ عَنْ اٰیٰتِ اللّٰهِ بَعْدَ اِذْ اُنْزِلَتْ اِلَیْكَ وَادْعُ اِلٰی رَبِّكَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۚ

87. இவ்வேதம் உமக்கு அருளப்பட்ட பின் (இதிலுள்ள) அல்லாஹ்வுடைய வசனங்களி(ன் பக்கம் நீர் மக்களை அழைப்பதி)லிருந்து அவர்கள் உம்மை தடுத்துவிட வேண்டாம். ஆகவே, உமது இறைவன் பக்கம் (நீர் அவர்களை) அழைத்துக் கொண்டேயிருப்பீராக. நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்களுடன் சேர்ந்து விட வேண்டாம். info
التفاسير:

external-link copy
88 : 28

وَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۘ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۫— كُلُّ شَیْءٍ هَالِكٌ اِلَّا وَجْهَهٗ ؕ— لَهُ الْحُكْمُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟۠

88. (நபியே!) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுளை நீர் அழைக்க வேண்டாம். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு கடவுள் இல்லவே இல்லை. அவனது திருமுகத்தைத் தவிர எல்லா பொருள்களும் அழிந்துவிடக் கூடியனவே. எல்லா அதிகாரங்களும் அவனுக்குரியனவே. அவனிடமே நீங்கள் அனைவரும் கொண்டு வரப்படுவீர்கள். info
التفاسير: