Prijevod značenja časnog Kur'ana - Prijevod na tamilski jezik - Omer Šerif.

Broj stranice: 206:187 close

external-link copy
123 : 9

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قَاتِلُوا الَّذِیْنَ یَلُوْنَكُمْ مِّنَ الْكُفَّارِ وَلْیَجِدُوْا فِیْكُمْ غِلْظَةً ؕ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟

நம்பிக்கையாளர்களே! உங்களை அடுத்திருக்கின்ற நிராகரிப்பாளர்களிடம் போரிடுங்கள். இன்னும், அவர்கள் உங்களிடம் கடுமையை உணரட்டும். நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். info
التفاسير:

external-link copy
124 : 9

وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ فَمِنْهُمْ مَّنْ یَّقُوْلُ اَیُّكُمْ زَادَتْهُ هٰذِهٖۤ اِیْمَانًا ۚ— فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا فَزَادَتْهُمْ اِیْمَانًا وَّهُمْ یَسْتَبْشِرُوْنَ ۟

இன்னும், ஓர் அத்தியாயம் (புதிதாக) இறக்கப்பட்டால், “உங்களில் எவருக்கு இது நம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று கேட்பவர் அவர்களில் இருக்கிறார்கள். ஆக, நம்பிக்கை கொண்டவர்கள் அவர்களோ (இறக்கப்பட்ட அத்தியாயத்தைக் கொண்டு) மகிழ்ச்சியடைந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு (இது) நம்பிக்கையை அதிகப்படுத்தியது. info
التفاسير:

external-link copy
125 : 9

وَاَمَّا الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا اِلٰی رِجْسِهِمْ وَمَاتُوْا وَهُمْ كٰفِرُوْنَ ۟

ஆக, எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கு அவர்களுடைய அசுத்தத்துடன் ஒரு அசுத்தத்தையே அது அதிகப்படுத்தியது! அவர்களோ நிராகரிப்பாளர்களாக இருக்கும் நிலையில்தான் இறப்பார்கள். info
التفاسير:

external-link copy
126 : 9

اَوَلَا یَرَوْنَ اَنَّهُمْ یُفْتَنُوْنَ فِیْ كُلِّ عَامٍ مَّرَّةً اَوْ مَرَّتَیْنِ ثُمَّ لَا یَتُوْبُوْنَ وَلَا هُمْ یَذَّكَّرُوْنَ ۟

ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ நிச்சயமாக அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? பிறகும், அவர்கள் திருந்துவதுமில்லை. இன்னும், அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. info
التفاسير:

external-link copy
127 : 9

وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ نَّظَرَ بَعْضُهُمْ اِلٰی بَعْضٍ ؕ— هَلْ یَرٰىكُمْ مِّنْ اَحَدٍ ثُمَّ انْصَرَفُوْا ؕ— صَرَفَ اللّٰهُ قُلُوْبَهُمْ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟

இன்னும், ஓர் அத்தியாயம் (புதிதாக) இறக்கப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை (விரைக்கப்) பார்க்கிறார்களா? “உங்களை யாரும் பார்க்கின்றனரா?” என்று (கேட்டு விட்டு) பின்னர், (அங்கிருந்து) திரும்பி சென்று விடுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறிய முயற்சிக்காத மக்களாக இருக்கும் காரணத்தால், அல்லாஹ்(வும்) அவர்களுடைய உள்ளங்களை (நம்பிக்கை கொள்வதிலிருந்து) திருப்பி விட்டான். info
التفاسير:

external-link copy
128 : 9

لَقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِیْزٌ عَلَیْهِ مَا عَنِتُّمْ حَرِیْصٌ عَلَیْكُمْ بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் சிரமப்படுவதை தன் மீது கடினமாக உணரக்கூடிய; உங்கள் மீது அதிக பற்றுடைய; நம்பிக்கையாளர்கள் மீது பெரிதும் இரக்கமுள்ள; அதிகம் கருணையுள்ள தூதர் உங்களிலிருந்தே உங்களிடம் வந்து விட்டார். info
التفاسير:

external-link copy
129 : 9

فَاِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِیَ اللّٰهُ ۖؗ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ— عَلَیْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ ۟۠

(நபியே) ஆக, அவர்கள் (உம்மை விட்டு புறக்கணித்து) விலகி சென்றால், “எனக்குப் போதுமானவன் அல்லாஹ்தான்; அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை; அவன் மீதே நான் நம்பிக்கை வைத்து (அவனையே சார்ந்து) விட்டேன்; இன்னும், அவன் மகத்தான ‘அர்ஷின்’ அதிபதி” என்று கூறுவீராக! info
التفاسير: