Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana

external-link copy
144 : 7

قَالَ یٰمُوْسٰۤی اِنِّی اصْطَفَیْتُكَ عَلَی النَّاسِ بِرِسٰلٰتِیْ وَبِكَلَامِیْ ۖؗ— فَخُذْ مَاۤ اٰتَیْتُكَ وَكُنْ مِّنَ الشّٰكِرِیْنَ ۟

7.144. அல்லாஹ் மூஸாவிடம் கூறினான்: மூஸாவே “நாம் உம்மை அவர்களின்பால் அனுப்பிய போது மக்கள் அனைவரையும்விட உம்மை சிறப்பித்து எனது தூதுப் பணிக்காக தேர்ந்தெடுத்துள்ளேன். நேரடியாக உம்மிடம் பேசியும் உம்மை சிறப்பித்துள்ளேன். நாம் உமக்கு அளிக்கும் இந்த சங்கையான கண்ணியத்தை எடுத்துக் கொள்வீராக. இந்த மகத்தான அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தக்கூடியவர்களில் ஒருவராக ஆகிவிடுவீராக. info
التفاسير:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• على العبد أن يكون من المُظْهِرين لإحسان الله وفضله عليه، فإن الشكر مقرون بالمزيد.
1. அடியான் அவனுக்கு அல்லாஹ் செய்த உபகாரத்தையும் அருளையும் வெளிப்படுத்தக்கூடியவனாக இருக்க வேண்டும். ஏனெனில் நன்றி செலுத்துதல் மென்மேலும் அதிகரிப்பதுடன் இணைந்துள்ளது. info

• على العبد الأخذ بالأحسن في الأقوال والأفعال.
2. அடியான் சொற்களிலும் செயல்களிலும் சிறந்தவற்றையே எடுத்துக்கொள்ள வேண்டும். info

• يجب تلقي الشريعة بحزم وجد وعزم على الطاعة وتنفيذ ما ورد فيها من الصلاح والإصلاح ومنع الفساد والإفساد.
3. வழிபடும் உறுதியுடன் மார்க்கத்தை கற்றுக் கொள்வது, சீர்திருந்துதல், சீர்திருத்தல், குழப்பத்தைத் தடுத்தல், குழப்பம் விளைவிப்பதைத் தடுத்தல் போன்ற ஷரீஆவில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதும் கட்டாயமாகும். info

• على العبد إذا أخطأ أو قصَّر في حق ربه أن يعترف بعظيم الجُرْم الذي أقدم عليه، وأنه لا ملجأ من الله في إقالة عثرته إلا إليه.
4.தனது இறைவனின் உரிமையில் ஒரு அடியான் தவறிழைத்தால் அல்லது குறை செய்தால் தான் செய்த பெரும் தவறை ஏற்றுக்கொள்வதோடு தனது அத்தவறை மன்னிப்பதற்கு அல்லாஹ்வை விட்டால் வேறு புகலிடமில்லை எனவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். info