Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana

Broj stranice:close

external-link copy
141 : 3

وَلِیُمَحِّصَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَیَمْحَقَ الْكٰفِرِیْنَ ۟

3.141. நம்பிக்கையாளர்களை அவர்களின் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்துவது, அவர்களின் அணியை நயவஞ்சகர்களை விட்டும் பிரித்தெடுப்பது, நிராகரிப்பாளர்களை வேரோடு அழித்துவிடுவது ஆகியவைகளும் அந்த நோக்கங்களில் சிலவாகும். info
التفاسير:

external-link copy
142 : 3

اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا یَعْلَمِ اللّٰهُ الَّذِیْنَ جٰهَدُوْا مِنْكُمْ وَیَعْلَمَ الصّٰبِرِیْنَ ۟

3.142. நம்பிக்கையாளர்களே! சோதனை, பொறுமை ஆகியவற்றை அனுபவிக்காமல் நீங்கள் சுவனம் சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா?அவற்றின் மூலமே அல்லாஹ்வின் பாதையில் உண்மையாகவே போர்புரிவோர், தமக்கு நேரும் சோதனையை பொறுமையுடன் எதிர்கொள்வோர் யார் என்பது தெளிவாகும். info
التفاسير:

external-link copy
143 : 3

وَلَقَدْ كُنْتُمْ تَمَنَّوْنَ الْمَوْتَ مِنْ قَبْلِ اَنْ تَلْقَوْهُ ۪— فَقَدْ رَاَیْتُمُوْهُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟۠

3.143. நம்பிக்கையாளர்களே! மரணத்தின் காரணிகளையும் அதன் கடுமையையும் நீங்கள் சந்திக்கும் முன்னரே பத்ருப்போரில் கொல்லப்பட்ட உங்கள் சகோதரர்களைப்போன்று நிராகரிப்பாளர்களை போர்க்களத்தில் சந்தித்து அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தீர்கள். இதோ, இந்த உஹதுப்போரிலே நீங்கள் ஆசைப்பட்டதைக் நேரடியாகவே கண்டுகொண்டீர்கள். info
التفاسير:

external-link copy
144 : 3

وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ ۚ— قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ؕ— اَفَاۡىِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰۤی اَعْقَابِكُمْ ؕ— وَمَنْ یَّنْقَلِبْ عَلٰی عَقِبَیْهِ فَلَنْ یَّضُرَّ اللّٰهَ شَیْـًٔا ؕ— وَسَیَجْزِی اللّٰهُ الشّٰكِرِیْنَ ۟

3.144. இறந்துவிட்ட அல்லது கொல்லப்பட்ட முந்தைய தூதர்களைப்போல முஹம்மதுவும் ஒரு தூதர்தாம். அவர் இறந்துவிட்டாலோ கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் ஜிஹாதை விட்டுவிட்டு உங்களின் மார்க்கத்தை விட்டு திரும்பி விடுவீர்களா என்ன? உங்களில் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டுத் திரும்பிவிடுபவர் அல்லாஹ்விக்கு எந்தத் தீங்கையும் இழைத்துவிட முடியாது. அவன் யாவற்றையும் மிகைத்தவன், வல்லமைமிக்கவன். மதம்மாறுபவர் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இழப்பிற்குள்ளாகி தனக்குத் தானே தீங்கைிழைத்துக்கொள்கிறார். தன் மார்க்கத்தில் உறுதியாக நிலைத்திருந்து, ஜிஹாது செய்து தனக்கு நன்றிசெலுத்தும் அடியார்களுக்கு அல்லாஹ் அழகிய கூலியை வழங்குவான். info
التفاسير:

external-link copy
145 : 3

وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًا ؕ— وَمَنْ یُّرِدْ ثَوَابَ الدُّنْیَا نُؤْتِهٖ مِنْهَا ۚ— وَمَنْ یُّرِدْ ثَوَابَ الْاٰخِرَةِ نُؤْتِهٖ مِنْهَا ؕ— وَسَنَجْزِی الشّٰكِرِیْنَ ۟

3.145. அல்லாஹ் எழுதிவைத்த தவணை நிறைவடையும் முன்னர் எந்த உயிரும் மரணிக்காது. அந்தத் தவணைக் காலம் கூடவோ குறையவோமாட்டாது. எவர் தம்முடைய செயல்களின்மூலம் இவ்வுலக நன்மையை விரும்புகிறாரோ நாம் அவருக்கு விதித்த அளவு வழங்குவோம். மறுமையில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. எவர் தம்முடைய செயல்களின்மூலம் மறுமையை விரும்புவாரோ நாம் அவருக்கு அதற்குரிய கூலியை வழங்குவோம். தங்கள் இறைவனுக்கு நன்றிசெலுத்தும் அடியார்களுக்கு நாம் மிகப்பெரும் கூலியை வழங்கிடுவோம். info
التفاسير:

external-link copy
146 : 3

وَكَاَیِّنْ مِّنْ نَّبِیٍّ قٰتَلَ ۙ— مَعَهٗ رِبِّیُّوْنَ كَثِیْرٌ ۚ— فَمَا وَهَنُوْا لِمَاۤ اَصَابَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ؕ— وَاللّٰهُ یُحِبُّ الصّٰبِرِیْنَ ۟

3.146. எத்தனையோ இறைத்தூதர்களுடன் சேர்ந்து அவர்களைப் பின்பற்றிய ஏராளமானவர்கள் போரிட்டுள்ளார்கள். அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதத்தாலும் காயங்களாலும் அவர்கள் ஜிஹாதைக் கைவிட்டு பலவீனமடைந்துவிடவுமில்லை. எதிரிகளுக்குப் பணிந்துவிடவுமில்லை. பொறுமையாகவும் உறுதியாகவும் நின்றார்கள். தன் பாதையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்துக்கொண்டு பொறுமையாக இருப்பவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். info
التفاسير:

external-link copy
147 : 3

وَمَا كَانَ قَوْلَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِیْۤ اَمْرِنَا وَثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟

3.147. இந்தப் பொறுமையாளர்கள் துன்பங்களால் பாதிக்கப்பட்டபோது, “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்களின் விஷயத்தில் நாங்கள் வரம்புமீறியதையும் மன்னித்துவிடுவாயாக. எதிரிகளை சந்திக்கும்போது எங்களை உறுதிப்படுத்துவாயாக. உன்னை நிராகரித்த மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவிபுரிவாயாக என்ற பிரார்த்தனையைத் தவிர வேறு எதனையும் கூறவில்லை. info
التفاسير:

external-link copy
148 : 3

فَاٰتٰىهُمُ اللّٰهُ ثَوَابَ الدُّنْیَا وَحُسْنَ ثَوَابِ الْاٰخِرَةِ ؕ— وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟۠

3.148. எனவே அல்லாஹ் அவர்களுக்கு உதவிசெய்தும் அதிகாரத்தை வழங்கியும் இவ்வுலகில் வெகுமதியை வழங்கினான். அவர்களைப் பொருந்திக் கொண்டு அருட்கொடைகள் அடங்கிய சுவனங்களில் நிரந்தரமான இன்பத்தை அளிப்பதன் மூலம் மறுமையிலும் அவர்களுக்கு நற்கூலியை அவன் வழங்குவான். வணக்க வழிபாட்டிலும் அன்றாட நடவடிக்கைகளிலும் சிறந்த முறையில் செயல்படுபவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். info
التفاسير:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• الابتلاء سُنَّة إلهية يتميز بها المجاهدون الصادقون الصابرون من غيرهم.
1. சோதனை இறைவன் ஏற்படுத்திய நியதியாகும். இதன்மூலம் உண்மையான பொறுமையாளர்களான முஜாஹிதுகள் மற்றவர்களிடமிருந்து தனித்து விளங்குகின்றனர். info

• يجب ألا يرتبط الجهاد في سبيل الله والدعوة إليه بأحد من البشر مهما علا قدره ومقامه.
2. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வதும் அழைப்புப் பணியும் எந்தவொரு தனி மனிதருடனும் இணைந்திருக்கக்கூடாது, அவர் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவராக இருந்தாலும் சரியே. info

• أعمار الناس وآجالهم ثابتة عند الله تعالى، لا يزيدها الحرص على الحياة، ولا ينقصها الإقدام والشجاعة.
3. மனிதர்களின் வயதுகளும் தவணைகளும் அல்லாஹ்விடத்தில் உறுதியாக நிர்ணயிக்கப்பட்டவையாகும். வாழ்வின் மீது கொண்ட மோகம் அதனை அதிகப்படுத்திவிடுவதுமில்லை. தைரியமும் துணிச்சமும் அதனைக் குறைத்துவிடுவதுமில்லை. info

• تختلف مقاصد الناس ونياتهم، فمنهم من يريد ثواب الله، ومنهم من يريد الدنيا، وكلٌّ سيُجازَى على نيَّته وعمله.
4. மனிதர்களின் எண்ணங்களும் நோக்கங்களும் வெவ்வேறானவை. அவர்களில் சிலர் அல்லாஹ்விடத்தில் நன்மையை நாடுகிறார்கள். சிலர் இவ்வுலகில் நன்மையை நாடுகிறார்கள். ஒவ்வொருவரும் அவர்களின் எண்ணங்களுக்கேற்ப, செயல்களுக்கேற்ப கூலி கொடுக்கப்படுவார்கள். info