Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana

external-link copy
37 : 2

فَتَلَقّٰۤی اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَیْهِ ؕ— اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟

2.37. உள்ளுதிப்பின் மூலம் அல்லாஹ் ஆதமுக்குக் கற்றுத்தந்த பிரார்த்தனையைக் கொண்டு ஆதம் அவனிடம் பிரார்த்தனை செய்தார். அதுதான் பின்வரும் பிரார்த்தனையாகும். எங்கள் இறைவா, எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து, எங்கள்மீது கருணை காட்டவில்லையெனில் நாங்கள் இழப்படைந்தவர்களாகி விடுவோம். (7:23) அல்லாஹ் அவருடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவரை மன்னித்தான். அல்லாஹ், தன் அடியார்களின் பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்ளக்கூடியவனாக, அவர்களின் விஷயத்தில் கருணைமிக்கவனாக இருக்கின்றான். info
التفاسير:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• الواجب على المؤمن إذا خفيت عليه حكمة الله في بعض خلقه وأَمْرِهِ أن يسلِّم لله في خلقه وأَمْرِهِ.
1. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர் அவனுடைய படைப்புகளில், கட்டளைகளில் சிலவற்றின் நோக்கத்தை அறியாமல் இருந்தாலும் அவற்றில் அவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவது கட்டாயமாகும். info

• رَفَعَ القرآن الكريم منزلة العلم، وجعله سببًا للتفضيل بين الخلق.
2. குர்ஆன் கல்வியின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளது. அதனை படைப்பினங்களுக்கு இடையிலுள்ள ஏற்றத்தாழ்வுக்கான காரணியாக ஆக்கியுள்ளது. info

• الكِبْرُ هو رأس المعاصي، وأساس كل بلاء ينزل بالخلق، وهو أول معصية عُصِيَ الله بها.
3. கர்வம் பாவங்களில் தலையாயதாகும். படைப்புகளுக்கு வரக்கூடிய துன்பங்களுக்கு கர்வமே அடிப்படையாக இருக்கின்றது. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செய்யப்பட்ட முதல் பாவம் இதுதான். info