Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana

Broj stranice:close

external-link copy
43 : 13

وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَسْتَ مُرْسَلًا ؕ— قُلْ كَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنِیْ وَبَیْنَكُمْ ۙ— وَمَنْ عِنْدَهٗ عِلْمُ الْكِتٰبِ ۟۠

13.43. நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: -“முஹம்மதே!- நீர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த தூதர் அல்ல என்று.” -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் என் இறைவனிடமிருந்து உங்களிடம் அனுப்பப்பட்டவன் என்பதற்கு உங்களுக்கும் எனக்குமிடையே சாட்சியாக இருப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். எனது வர்ணனை இடம்பெற்றுள்ள இறைவேதங்களின் அறிவு யாரிடம் உள்ளதோ அவர்களும் சாட்சி கூறுவார்கள். நம்பகமானவர் என யாருக்கு அல்லாஹ் சாட்சி கூறுகிறானோ நிராகரிப்பாளர்களின் நிராகரிப்பு அவருக்கு எந்த தீங்கையும் அளிக்காது. info
التفاسير:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• أن المقصد من إنزال القرآن هو الهداية بإخراج الناس من ظلمات الباطل إلى نور الحق.
1. மக்களை அசத்தியம் என்னும் இருள்களிலிருந்து சத்தியம் என்னும் ஒளியை நோக்கி வெளியேற்றி நேர்வழி காட்டுவதே குர்ஆன் இறக்கப்பட்டதன் நோக்கமாகும். info

• إرسال الرسل يكون بلسان أقوامهم ولغتهم؛ لأنه أبلغ في الفهم عنهم، فيكون أدعى للقبول والامتثال.
2. தூதர்கள் அவரவர் சமூக மொழியிலேயே அனுப்பப்பட்டார்கள். ஏனெனில் அதுவே அவர்கள் கூற வருவதை மக்கள் நன்கு புரிவதற்கும், ஏற்றுச் செயற்படுவதற்கும் வழிவகுக்கும். info

• وظيفة الرسل تتلخص في إرشاد الناس وقيادتهم للخروج من الظلمات إلى النور.
3. சுருங்கக்கூறின் இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் வெளியேறுவதற்கு, மக்களுக்கு வழிகாட்டுவதே தூதர்களின் பணியாகும். info