(மனிதர்களே!) உங்களுக்கு முன்னர் (வாழ்ந்த பல) தலைமுறைகளை அவர்கள் அநியாயம் செய்தபோது திட்டவட்டமாக நாம் அழித்தோம். இன்னும், அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தனர். எனினும், (அவற்றை) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருக்கவில்லை. குற்றம் புரிகின்ற மக்களை இவ்வாறே நாம் தண்டிப்போம்.