நன்மையை (கேட்டு) அவர்கள் அவசரப்படுவது போல் அல்லாஹ்வும் மனிதர்களுக்கு (அவர்களின் பாவத்திற்குரிய)த் தீங்கை (-தண்டனையை) விரைவாகக் கொடுத்தால் அவர்களுக்கு அவர்களுடைய தவணைக் காலம் (முன்பே) முடிக்கப்பட்டிருக்கும். ஆகவே, நம் சந்திப்பை பயப்படாதவர்களை, - அவர்களுடைய வழிகேட்டிலேயே கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக – விட்டு விடுகிறோம்.