இன்னும், அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கைக் கொடுத்தால் அதை நீக்குபவர் அவனைத் தவிர அறவே (யாரும்) இல்லை. இன்னும், அவன் உமக்கு ஒரு நன்மையை நாடினால் (உம்மை விட்டும்) அவனுடைய அருளைத் தடுப்பவர் அறவே (யாரும்) இல்லை. அவன் தன் அடியார்களில் தான் நாடுகின்றவர்களுக்கு அதை கொடுக்கிறான். இன்னும், அவன்தான் மகா மன்னிப்பாளன்; பெரும் கருணையாளன்.