7.12. அல்லாஹ் இப்லீஸைக் கண்டித்தவாறு கேட்டான்: “என் கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஆதமுக்கு சிரம்பணிவதிலிருந்து எது உன்னைத் தடுத்தது?” இப்லீஸ் தன் இறைவனிடம் பின்வருமாறு பதில் கூறினான்: “நான் அவரைவிடச் சிறந்தவன் என்பதே என்னைத் தடுத்தது. நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய். அவரையோ மண்ணிலிருந்துதான் படைத்தாய். நெருப்பு மண்ணைவிடச் சிறந்தது.”
7.13. அல்லாஹ் அவனிடம் கூறினான்: “சொர்க்கத்திலிருந்து இறங்கிவிடு. இங்கு பெருமையடிக்க உனக்கு உரிமையில்லை. ஏனெனில் இது தூய்மையானவர்கள் வசிக்கும் இடமாகும். இங்கு வசிப்பதற்கு உனக்கு அனுமதியில்லை. இப்லீஸே! நீ ஆதமை விடச் சிறந்தவன் என்று உன்னை நினைத்தாலும் நிச்சயமாக நீ இழிவுற்ற அற்பர்களில் ஆகிவிட்டாய்.”
التفاسير:
14:7
قَالَ اَنْظِرْنِیْۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟
7.14. இப்லீஸ் கேட்டான்: “மீண்டும் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடு. நான் மனிதர்களில் என்னால் வழிகெடுக்க முடிந்தவர்களை வழிகெடுத்துவிடுவேன்.“
التفاسير:
15:7
قَالَ اِنَّكَ مِنَ الْمُنْظَرِیْنَ ۟
7.15. அதற்கு அல்லாஹ் கூறினான்: “இப்லீஸே, முதல் சூர் ஊதப்படும் தினம் மரணம் விதிக்கப்பட்டுள்ள அவகாசம் வழங்கப்பட்டவர்களில் நீயும் ஒருவன். அப்போது படைப்புகள் அனைத்தும் மரணித்து அல்லாஹ் மாத்திரமே எஞ்சியருப்பான்.”
7.16. இப்லீஸ் கூறினான்: “உன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நான் ஆதமுக்கு சிரம்பணிய மறுத்ததனால் நீ என்னை வழிகெடுத்துவிட்ட காரணத்தால் ஆதமுடைய மக்களை வழிகெடுப்பதற்காக உன்னுடைய நேரான வழியின் மீது அமர்ந்து கொள்வேன். அவர்களது தந்தை ஆதமுக்கு சிரம்பணியாமல் நான் வழிகெட்டது போன்று அவர்களையும் நேரான பாதையை விட்டும் திசைதிருப்பி வழிகெடுத்தே தீருவேன்.”
7.17. “எல்லா புறங்களிலிருந்தும் அவர்களிடம் நான் வருவேன். அவர்களை மறுமையின் மீது பற்றற்றவர்களாக்கி உலகத்தின் மீது மோகம் கொள்ள வைப்பேன். அவர்களுக்குச் சந்தேகங்களை உண்டுபண்ணுவேன். அவர்களின் மனஇச்சைகளை அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டுவேன். நன்றி மறக்குமாறு நான் அவர்களுக்குக் கூறுவதனால் அவர்களில் பெரும்பாலோரை உனக்கு நன்றி செலுத்தக்கூடியவர்களாக நீ காணமாட்டாய்.”
7.18. அல்லாஹ் அவனிடம் கூறினான்: “என் அருளிலிருந்து விரட்டப்பட்டவனாக, இழிவடைந்தவனாக சொர்க்கத்திலிருந்து வெளியேறி விடு. மறுமையில் உன்னையும் உன்னைப் பின்பற்றி உனக்கு வழிப்பட்டு தனது இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்வோரையும் கொண்டு நரகத்தை நான் நிரப்புவேன்.”
7.19. அல்லாஹ் ஆதமிடம் கூறினான்: “ஆதமே! நீரும் உம் மனைவி ஹவ்வாவும் சொர்க்கத்தில் வசியுங்கள். அங்கு தூய்மையானவற்றிலிருந்து நீங்கள் விரும்பியவற்றை உண்ணுங்கள். இந்த மரத்திலிருந்து (அவர்களுக்கு ஒரு மரத்தை அல்லாஹ் குறிப்பிட்டான்.) மட்டும் உண்டுவிடாதீர்கள். நான் தடுத்ததற்குப் பிறகும் நீங்கள் அதிலிருந்து உண்டு விட்டால் என் வரம்புகளை மீறியவர்களாகி விடுவீர்கள்.
7.20. அவர்களிருவரை விட்டும் மறைக்கப்பட்டுள்ள அவர்களின் வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக இப்லீஸ் அவர்கள் இருவருக்கும் ஊசலாட்ட வார்த்தையை உண்டாக்கினான். அவர்கள் இருவரிடமும் கூறினான்: “நீங்கள் இருவரும் வானவர்களாவதையும் சுவனத்தில் நிரந்தரமாக இருப்பவர்களாக ஆகிவிடுவிடுவதையும் விரும்பாததனால்தான் இந்த மரத்திலிருந்து உண்பதை விட்டும் உங்களை அல்லாஹ் தடுத்துள்ளான்.”
7.22. ஏமாற்றி அவர்களின் உயர்ந்த இடத்திலிருந்து அவர்களை இறக்கினான். தடுக்கப்பட்ட அந்த மரத்திலிருந்து அவர்கள் உண்டபோது அவர்கள் இருவருடைய வெட்கத்தலங்களும் வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைக் கொண்டு அவற்றை மறைக்க முயற்சித்தார்கள். அவர்களின் இறைவன் அவர்களை அழைத்துக் கூறினான்: “இந்த மரத்திலிருந்து உண்ணக் கூடாது என்று நான் உங்களைத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். எனவே அவன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?
التفاسير:
من فوائد الآيات في هذه الصفحة:
• دلّت الآيات على أن من عصى مولاه فهو ذليل.
1. தன் இறைவனின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுபவன் இழிவடைவான் என்பதை மேற்கூறிய வசனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
• أعلن الشيطان عداوته لبني آدم، وتوعد أن يصدهم عن الصراط المستقيم بكل أنواع الوسائل والأساليب.
2. ஷைத்தான் மனிதர்களுடனான தனது விரோதத்தை பகிரங்கமாக அறிவித்துவிட்டான். அனைத்து வகையான வழிமுறைகள், சாதனங்கள் மூலமும் நேரான பாதையை விட்டும் அவர்களைத் தடுப்பதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளான்.
• خطورة المعصية وأنها سبب لعقوبات الله الدنيوية والأخروية.
3. பாவத்தின் விபரீதம். அது உலக, மறுமை தண்டணைகளுக்குக் காரணமாகும்.