ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم

رقم الصفحة:close

external-link copy
137 : 26

اِنْ هٰذَاۤ اِلَّا خُلُقُ الْاَوَّلِیْنَ ۟ۙ

26.137. இவை முன்னோர்களின் மார்க்கமும் வழமைகளும் குணங்களுமாகும். info
التفاسير:

external-link copy
138 : 26

وَمَا نَحْنُ بِمُعَذَّبِیْنَ ۟ۚ

26.138. நாங்கள் தண்டிக்கப்படுபவர்களல்ல. info
التفاسير:

external-link copy
139 : 26

فَكَذَّبُوْهُ فَاَهْلَكْنٰهُمْ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ— وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟

26.139. அவர்கள் தங்களின் தூதர் ஹூதை தொடர்ந்து பொய்ப்பித்தார்கள். எனவே நாம் அவர்களை நாசகரமான காற்றால் அழித்தோம். நிச்சயமாக இவ்வாறு அழிக்கப்பட்டதில் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கைகொள்பவர்களாக இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
140 : 26

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠

26.140. -தூதரே!- தன் எதிரிகளைத் தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
141 : 26

كَذَّبَتْ ثَمُوْدُ الْمُرْسَلِیْنَ ۟ۚۖ

26.141. ஸமூத் சமூகமும் தங்களின் தூதர் ஸாலிஹை பொய்ப்பித்து தூதர்களை பொய்ப்பித்தனர். info
التفاسير:

external-link copy
142 : 26

اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ صٰلِحٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ

26.142. அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவதை விட்டுவிட்டு அவனை அஞ்சமாட்டீர்களா? info
التفاسير:

external-link copy
143 : 26

اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ

26.143. நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். அவனிடமிருந்து எடுத்துரைப்பவற்றில் நம்பிக்கையாளனாவேன். அதில் கூட்டவோ குறைக்கவோ மாட்டேன். info
التفاسير:

external-link copy
144 : 26

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ

26.144. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவுபவற்றிலும் தடுப்பவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள். info
التفاسير:

external-link copy
145 : 26

وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ— اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ

26.145. நான் என் இறைவனிடமிருந்து எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலியோ படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அல்லாத ஏனையவர்களிடமல்ல. info
التفاسير:

external-link copy
146 : 26

اَتُتْرَكُوْنَ فِیْ مَا هٰهُنَاۤ اٰمِنِیْنَ ۟ۙ

26.146. நீங்கள் இருக்கும் நன்மைகளிலும், அருட்கொடைகளிலும் உண்டு பயப்படாமல் அமைதியாக விடப்படுவதை எதிர்பார்க்கின்றீர்களா? info
التفاسير:

external-link copy
147 : 26

فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ

26.147. தோட்டங்களிலும் ஓடக்கூடிய நீருற்றுகளிலும் info
التفاسير:

external-link copy
148 : 26

وَّزُرُوْعٍ وَّنَخْلٍ طَلْعُهَا هَضِیْمٌ ۟ۚ

26.148. விளைநிலங்களிலும் மிருதுவான நல்ல பழங்களைக்கொண்ட பேரீச்சந்தோப்புகளிலும் (அச்சமின்றி அமைதியாக வாழ விட்டுவிடப்படுவீர்களா?) info
التفاسير:

external-link copy
149 : 26

وَتَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُیُوْتًا فٰرِهِیْنَ ۟ۚ

26.149. நீங்கள் மலைகளை குடைந்து நீங்கள் வசிப்பதற்கான வீடுகளை அமைக்கிறீர்கள். நீங்கள் அவற்றைக் குடையும் திறமையுடையவர்களாக இருக்கிறீர்கள். info
التفاسير:

external-link copy
150 : 26

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ

26.150. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவுபவற்றிலும் தடுப்பவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள். info
التفاسير:

external-link copy
151 : 26

وَلَا تُطِیْعُوْۤا اَمْرَ الْمُسْرِفِیْنَ ۟ۙ

26.151. பாவங்கள் புரிந்து தங்கள் மீதே வரம்புமீறிக்கொண்டவர்களுக்குக் கட்டுப்படாதீர்கள். info
التفاسير:

external-link copy
152 : 26

الَّذِیْنَ یُفْسِدُوْنَ فِی الْاَرْضِ وَلَا یُصْلِحُوْنَ ۟

26.152. அவர்கள் பாவங்களைப் பரப்புவதன் மூலம் பூமியில் குழப்பம் விளைவிக்கிறார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் தங்களை சீர்படுத்திக் கொள்வதில்லை. info
التفاسير:

external-link copy
153 : 26

قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِیْنَ ۟ۚ

26.153. அவரது சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “நிச்சயமாக நீர் பலமுறை சூனியம் செய்யப்பட்டவர்களில் ஒருவராக இருந்ததால், அது மிகைத்து உமது அறிவைப் போக்கிவிட்டது. info
التفاسير:

external-link copy
154 : 26

مَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا ۖۚ— فَاْتِ بِاٰیَةٍ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟

26.154. நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர்தான். நீர் தூதராக இருப்பதற்கு எங்களைவிட உமக்கு எந்தச் சிறப்பும் இல்லை. நிச்சயமாக தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று கூறும் விஷயத்தில் நீர் உண்மையாளராக இருந்தால் உமது நம்பகத்தன்மையை நிரூபிக்கக்கூடிய ஆதாரத்தைக் கொண்டு வாரும். info
التفاسير:

external-link copy
155 : 26

قَالَ هٰذِهٖ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَّلَكُمْ شِرْبُ یَوْمٍ مَّعْلُوْمٍ ۟ۚ

26.155. அவர்களுக்கு ஸாலிஹ் கூறினார்: -ஸாலிஹ் நபிக்கு அல்லாஹ் ஒரு அடையாளத்தை வழங்கினான். அவன் பாறையிலிருந்து வெளிப்படுத்திய பெண் ஒட்டகமே அதுவாகும்.- “இது தொட்டு பார்க்கக்கூடிய பெண் ஒட்டகமாகும். நீரில் இதற்கும் பங்குண்டு. உங்களுக்கும் குறித்த அளவு பங்கு உண்டு. உங்களுக்குரிய நாளில் இந்த ஒட்டகம் நீர் அருந்தாது. இது நீர் அருந்தும் நாளில் நீங்கள் அருந்த முடியாது.” info
التفاسير:

external-link copy
156 : 26

وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابُ یَوْمٍ عَظِیْمٍ ۟

26.156. அதற்கு அடித்தோ, அதனை அறுத்தோ எந்தத் தீங்கும் இழைக்காதீர்கள். அவ்வாறு செய்தால் மாபெரும் நாளில் அல்லாஹ்விடமிருந்து இறங்கும் வேதனை உங்களைத் தாக்கி அழித்து விடும். info
التفاسير:

external-link copy
157 : 26

فَعَقَرُوْهَا فَاَصْبَحُوْا نٰدِمِیْنَ ۟ۙ

26.157. அவர்கள் அதனைக் கொன்றுவிட முடிவு செய்தார்கள். அவர்களில் மிகவும் துஷ்டன் அதனைக் கொன்றுவிட்டான். நிச்சயமாக வேதனை தங்கள் மீது சந்தேகம் இல்லாமல் உறுதியாக இறங்கப்போகிறது என்பதை அறிந்தவுடன் தாங்கள் செய்த செயலுக்காக வருத்தப்பட்டு நின்றார்கள். ஆனால் வேதனையைக் கண்ணால் காணும் போது வருத்தப்படுவது எந்தப் பயனையும் தராது. info
التفاسير:

external-link copy
158 : 26

فَاَخَذَهُمُ الْعَذَابُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ— وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟

26.158. அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையான பூகம்பமும் சத்தமும் அவர்களைத் தாக்கியது. நிச்சயமாக மேற்கூறப்பட்ட ஸாலிஹ் மற்றும் அவரது சமூகத்தின் சம்பவத்தில் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கைகொள்பவர்களாக இல்லை. info
التفاسير:

external-link copy
159 : 26

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠

26.159. -தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளைத் தண்டிக்கும் உம் இறைவன் (யாவற்றையும்) மிகைத்தவன். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். info
التفاسير:
من فوائد الآيات في هذه الصفحة:
• توالي النعم مع الكفر استدراج للهلاك.
1. நிராகரிப்பில் இருக்கும் போது அருள்கள் கிடைப்பது அழிவிற்கு சிறிது சிறிதாக வழிவகுப்பதாகும். info

• التذكير بالنعم يُرتجى منه الإيمان والعودة إلى الله من العبد.
2. அருட்கொடைகளை நினைவூட்டுவதன் மூலம் அடியான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவன் பக்கம் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. info

• المعاصي هي سبب الفساد في الأرض.
3. பாவங்கள் பூமியில் குழப்பம் ஏற்பட காரணமாக இருக்கின்றன. info