164. ‘‘அல்லாஹ்வே அனைவரையும் படைத்து பரிபாலிக்க அவனையன்றி மற்றெவரையும் எனக்கு இறைவனாக நான்எடுத்துக் கொள்வேனா? பாவம் செய்யும் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது. ஆகவே, ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. (இறந்த) பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடமே செல்வீர்கள். நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்ததைப் பற்றி (அவற்றில் எது தவறு, எது சரி என்பதை அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவிப்பான்.