《古兰经》译解 - 泰米尔语翻译-欧麦尔·谢里夫

பாதிர்

external-link copy
1 : 35

اَلْحَمْدُ لِلّٰهِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ جَاعِلِ الْمَلٰٓىِٕكَةِ رُسُلًا اُولِیْۤ اَجْنِحَةٍ مَّثْنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ؕ— یَزِیْدُ فِی الْخَلْقِ مَا یَشَآءُ ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

எல்லாப் புகழும் வானங்கள் இன்னும் பூமியின் படைப்பாளனாகிய; வானவர்களை (நபிமார்களிடம் அனுப்பப்படுகிற) தூதர்களாகவும் இரண்டு இரண்டு, மூன்று மூன்று, நான்கு நான்கு இறக்கைகளை உடையவர்களாகவும் ஆக்கக் கூடியவனாகிய அல்லாஹ்விற்கே உரியது. அவன் படைப்புகளில் தான் நாடுவதை அதிகப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உள்ளவன். info
التفاسير:

external-link copy
2 : 35

مَا یَفْتَحِ اللّٰهُ لِلنَّاسِ مِنْ رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۚ— وَمَا یُمْسِكْ ۙ— فَلَا مُرْسِلَ لَهٗ مِنْ بَعْدِهٖ ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

அல்லாஹ் மக்களுக்கு (தன்) அருள்களில் இருந்து எதையும் திறந்தால் அதை தடுப்பவர் எவரும் இல்லை. இன்னும், அவன் எதையும் தடுத்து நிறுத்திவிட்டால் அவனுக்குப் பின் அதை அனுப்பித்தருபவர் எவரும் இல்லை. இன்னும், அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான். info
التفاسير:

external-link copy
3 : 35

یٰۤاَیُّهَا النَّاسُ اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ ؕ— هَلْ مِنْ خَالِقٍ غَیْرُ اللّٰهِ یَرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ ؕ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؗ— فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟

மக்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைவு கூருங்கள். வானங்களில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிக்கிற படைப்பாளன் அல்லாஹ்வை அன்றி யாரும் உண்டா? அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, நீங்கள் எப்படி (அவனை விட்டு) திருப்பப்படுகிறீர்கள். info
التفاسير: