《古兰经》译解 - 泰米尔语翻译-欧麦尔·谢里夫

页码:close

external-link copy
34 : 14

وَاٰتٰىكُمْ مِّنْ كُلِّ مَا سَاَلْتُمُوْهُ ؕ— وَاِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللّٰهِ لَا تُحْصُوْهَا ؕ— اِنَّ الْاِنْسَانَ لَظَلُوْمٌ كَفَّارٌ ۟۠

இன்னும், நீங்கள் அவனிடம் கேட்ட எல்லாவற்றிலிருந்தும் உங்களுக்கு அவன் கொடுத்தான். மேலும், அல்லாஹ்வின் அருளை நீங்கள் எண்ணினால் அதை நீங்கள் எண்ணி முடிக்க முடியாது! நிச்சயமாக (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாத) மனிதன் மகா அநியாயக்காரன், மிக நன்றி கெட்டவன் ஆவான். info
التفاسير:

external-link copy
35 : 14

وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِیْ وَبَنِیَّ اَنْ نَّعْبُدَ الْاَصْنَامَ ۟ؕ

“என் இறைவா! இவ்வூரை பாதுகாப்புமிக்கதாக ஆக்கு! மேலும், என்னையும் என் பிள்ளைகளையும் சிலைகளை நாங்கள் வணங்குவதை விட்டும் தூரமாக்கி வை!” என்று இப்ராஹீம் பிரார்த்தனை செய்ததை நினைவு கூர்வீராக! info
التفاسير:

external-link copy
36 : 14

رَبِّ اِنَّهُنَّ اَضْلَلْنَ كَثِیْرًا مِّنَ النَّاسِ ۚ— فَمَنْ تَبِعَنِیْ فَاِنَّهٗ مِنِّیْ ۚ— وَمَنْ عَصَانِیْ فَاِنَّكَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

“என் இறைவா! நிச்சயமாக இவை மக்களில் பலரை வழி கெடுத்தன. ஆகவே, எவர் என்னைப் பின்பற்றினாரோ நிச்சயமாக அவர் என்னை சேர்ந்தவர்; மேலும், எவர் எனக்கு மாறு செய்தாரோ, நிச்சயமாக நீ மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.” info
التفاسير:

external-link copy
37 : 14

رَبَّنَاۤ اِنِّیْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّیَّتِیْ بِوَادٍ غَیْرِ ذِیْ زَرْعٍ عِنْدَ بَیْتِكَ الْمُحَرَّمِ ۙ— رَبَّنَا لِیُقِیْمُوا الصَّلٰوةَ فَاجْعَلْ اَفْىِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِیْۤ اِلَیْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ یَشْكُرُوْنَ ۟

“எங்கள் இறைவா! நிச்சயமாக நான் என் சந்ததிகளில் சிலரை விளைச்சல் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில், புனிதமான உன் வீட்டின் அருகில் தங்க வைத்தேன். எங்கள் இறைவா! அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவதற்கு அவர்களுக்கு அருள் புரி! எங்கள் இறைவா! ஆகவே, மக்களின் உள்ளங்களை அவர்கள் பக்கம் ஆசைப்படக்கூடியதாக ஆக்கு! இன்னும், அவர்கள் (உனக்கு) நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளி!” info
التفاسير:

external-link copy
38 : 14

رَبَّنَاۤ اِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِیْ وَمَا نُعْلِنُ ؕ— وَمَا یَخْفٰی عَلَی اللّٰهِ مِنْ شَیْءٍ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ ۟

“எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பதையும், நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ நன்கறிவாய். பூமியிலும் வானத்திலும் எதுவும் அல்லாஹ்விற்கு மறைந்ததாக இல்லை.” info
التفاسير:

external-link copy
39 : 14

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ وَهَبَ لِیْ عَلَی الْكِبَرِ اِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ ؕ— اِنَّ رَبِّیْ لَسَمِیْعُ الدُّعَآءِ ۟

“வயோதிகத்தில் எனக்கு இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியதாகும். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன் ஆவான்.” info
التفاسير:

external-link copy
40 : 14

رَبِّ اجْعَلْنِیْ مُقِیْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّیَّتِیْ ۖۗ— رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ ۟

“என் இறைவா! என்னை தொழுகையை நிலைநிறுத்துபவனாக ஆக்கு! இன்னும் என் சந்ததிகளிலும் தொழுகையை நிலைநிறுத்துபவர்களை ஏற்படுத்து!. எங்கள் இறைவா! இன்னும், என் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்!” info
التفاسير:

external-link copy
41 : 14

رَبَّنَا اغْفِرْ لِیْ وَلِوَالِدَیَّ وَلِلْمُؤْمِنِیْنَ یَوْمَ یَقُوْمُ الْحِسَابُ ۟۠

“எங்கள் இறைவா! விசாரணை நடக்கின்ற நாளில் எனக்கும், என் தாய் தந்தைக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் மன்னிப்பளி!” info
التفاسير:

external-link copy
42 : 14

وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا یَعْمَلُ الظّٰلِمُوْنَ ؕ۬— اِنَّمَا یُؤَخِّرُهُمْ لِیَوْمٍ تَشْخَصُ فِیْهِ الْاَبْصَارُ ۟ۙ

(நபியே!) அக்கிரமக்காரர்கள் செய்வதை கவனிக்காதவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று எண்ணி விடாதீர்! அவன் அவர்களை (தண்டிக்காமல்) தாமதிப்பதெல்லாம் ஒரு நாளுக்காகத்தான். பார்வைகள் அதில் கூர்ந்து விழித்திடும். info
التفاسير: