《古兰经》译解 - 泰米尔语翻译-欧麦尔·谢里夫

அர்ரஃத்

external-link copy
1 : 13

الٓمّٓرٰ ۫— تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ ؕ— وَالَّذِیْۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟

அலிஃப்; லாம்; மீம்; றா. இவை, (மகத்தான, ஞானமிக்க) வேதத்தின் வசனங்களாகும். (நபியே!) உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதுதான் (உறுதியான) உண்மையாகும். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) நம்பிக்கை கொள்ளாமல் இருக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
2 : 13

اَللّٰهُ الَّذِیْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَیْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ؕ— كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ— یُدَبِّرُ الْاَمْرَ یُفَصِّلُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ بِلِقَآءِ رَبِّكُمْ تُوْقِنُوْنَ ۟

அல்லாஹ், வானங்களை தூண்கள் இன்றி உயர்த்தினான். அதை நீங்கள் காண்கிறீர்கள். பிறகு, அர்ஷின் மேல் உயர்ந்து விட்டான். சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான். எல்லாம் குறிப்பிடப்பட்ட ஒரு தவணையை நோக்கி ஓடுகின்றன. எல்லா காரியங்களையும் திட்டமிட்டு நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்பவேண்டும் என்பதற்காக வசனங்களை (உங்களுக்கு) விவரிக்கிறான். info
التفاسير:

external-link copy
3 : 13

وَهُوَ الَّذِیْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِیْهَا رَوَاسِیَ وَاَنْهٰرًا ؕ— وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِیْهَا زَوْجَیْنِ اثْنَیْنِ یُغْشِی الَّیْلَ النَّهَارَ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟

அவன்தான் பூமியை விரித்தான்; இன்னும், அதில் மலைகளையும் ஆறுகளையும் ஏற்படுத்தினான். இன்னும், அவற்றில் எல்லாக் கனிகளிலும் இரண்டு ஜோடிகளை ஏற்படுத்தினான். இரவினால் பகலை மூடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக (இறைவன் ஒருவனே என்பதை உணர்த்தும் பல) அத்தாட்சிகள் இதில் இருக்கின்றன. info
التفاسير:

external-link copy
4 : 13

وَفِی الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِیْلٌ صِنْوَانٌ وَّغَیْرُ صِنْوَانٍ یُّسْقٰی بِمَآءٍ وَّاحِدٍ ۫— وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰی بَعْضٍ فِی الْاُكُلِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟

மேலும், பூமியில் ஒன்றுக்கொன்று சமீபமான பகுதிகள் உள்ளன. (ஆனால், அவை தன்மைகளால் மாறுபட்டவை ஆகும்.) இன்னும், திராட்சைகளின் தோட்டங்களும், விவசாய (நில)மும், ஒரே வேரிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மரங்கள் முளைக்கின்ற பேரீச்சமும்; இன்னும், ஒரு வேரிலிருந்து ஒரே ஒரு மரம் முளைக்கின்ற பேரீச்சமும் உள்ளன. இவை (அனைத்தும்) ஒரே நீரைக் கொண்டு (நீர்) புகட்டப்படுகின்றன. ஆனால், அவற்றில் சிலவற்றை, சிலவற்றைவிட சுவையில் சிறப்பிக்கிறோம். சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு இதில் நிச்சயமாக (இறைவன் ஒருவனே என்பதை உணர்த்தும்) அத்தாட்சிகள் இருக்கின்றன. info
التفاسير:

external-link copy
5 : 13

وَاِنْ تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ ءَاِذَا كُنَّا تُرٰبًا ءَاِنَّا لَفِیْ خَلْقٍ جَدِیْدٍ ؕ۬— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ ۚ— وَاُولٰٓىِٕكَ الْاَغْلٰلُ فِیْۤ اَعْنَاقِهِمْ ۚ— وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

(நபியே! மக்களில் பலர் அல்லாஹ்வை வணங்காமல், கற் சிலைகளை வணங்குவதைப் பற்றி) நீர் ஆச்சரியப்பட்டால், “நாம் (இறந்து மண்ணோடு) மண்ணாக ஆகிவிட்டால், (அதற்கு பின்னர்) புதியதோர் படைப்பாக நிச்சயமாக நாம் உருவாக்கப்படுவோமா?” என்ற அவர்களுடைய கூற்றோ மிக ஆச்சரியமானதே! இவர்கள்தான் தங்கள் இறைவனை நிராகரித்தவர்கள். மேலும், இவர்களுடைய கழுத்துகளில் அரிகண்டங்கள் இருக்கும். இன்னும், இவர்கள் நரகவாசிகளே! அதில் இவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். info
التفاسير: