《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
45 : 7

الَّذِیْنَ یَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ۚ— وَهُمْ بِالْاٰخِرَةِ كٰفِرُوْنَ ۟ۘ

7.45. இந்த அநியாயக்காரர்கள் தங்களைத் தாங்களே அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துக் கொண்டிருந்தது மட்டுமின்றி மற்றவர்களையும் அதனை விட்டுத் தடுத்துக் கொண்டிருந்தார்கள். சத்தியப் பாதை யாரும் செல்ல முடியாதவாறு கோணலாகிவிட வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டார்கள். அவர்கள் மறுமை நாளை நிராகரித்தோர், அதற்கான தயாரிப்பில் ஈடுபடாதோர். info
التفاسير:
这业中每段经文的优越:
• عدم الإيمان بالبعث سبب مباشر للإقبال على الشهوات.
1. மறுமை நாளின் மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பது இச்சைகளின் மீது மோகம் கொள்வதற்கான நேரடிக் காரணமாகும். info

• يتيقن الناس يوم القيامة تحقق وعد الله لأهل طاعته، وتحقق وعيده للكافرين.
2. அல்லாஹ் தன்னை வழிப்பட்டோருக்கு அளித்த வாக்குறுதியும் நிராகரிப்பாளர்களுக்கு வாக்களித்த எச்சரிக்கையும் உண்மையானதே என்பதை மக்கள் உறுதியாக மறுமை நாளில் அறிந்து கொள்வார்கள். info

• الناس يوم القيامة فريقان: فريق في الجنة وفريق في النار، وبينهما فريق في مكان وسط لتساوي حسناتهم وسيئاتهم، ومصيرهم إلى الجنة.
3. மறுமை நாளில் மனிதர்கள் சுவனவாசிகள், நரகவாசிகள் என்னும் இரு பிரிவினராக இருப்பார்கள். அவையிரண்டுக்குமிடையில் ஒரு மத்திய பகுதியில் நன்மைகளும் தீமைகளும் சமமாகிவிட்ட மூன்றாவது பிரிவினரும் இருப்பார்கள். அவர்களது முடிவு சுவர்க்கமே. info

• على الذين يملكون المال والجاه وكثرة الأتباع أن يعلموا أن هذا كله لن يغني عنهم من الله شيئًا، ولن ينجيهم من عذاب الله.
4. பணம், பதவி மற்றும் தன்னைப் பின்பற்றும் பெரும் கூட்டத்தினரைப் பெற்றவர்கள், அவையனைத்தும் அல்லாஹ்விடம் எந்தப் பயனையும் அளிக்காது என்பதையும் அவை நரக வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். info