《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
70 : 6

وَذَرِ الَّذِیْنَ اتَّخَذُوْا دِیْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَیٰوةُ الدُّنْیَا وَذَكِّرْ بِهٖۤ اَنْ تُبْسَلَ نَفْسٌ بِمَا كَسَبَتْ ۖۗ— لَیْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِیٌّ وَّلَا شَفِیْعٌ ۚ— وَاِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا یُؤْخَذْ مِنْهَا ؕ— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اُبْسِلُوْا بِمَا كَسَبُوْا ۚ— لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِیْمٍ وَّعَذَابٌ اَلِیْمٌ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟۠

6.70. தூதரே! தங்களின் மார்க்கத்தைப் பரிகாசம் செய்து வீண் விளையாட்டாக ஆக்கிக் கொண்ட இந்த இணைவைப்பாளர்களை விட்டு விடுவீராக. இவ்வுலகில் உள்ள அற்ப இன்பங்கள் அவர்களை ஏமாற்றிவிட்டது. தூதரே! எவரும் தாம் செய்த தீமைகளின் காரணமாக அழிந்து விடாமல் இருக்க மக்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு அறிவுரை வழங்குவீராக. மறுமை நாளில் அல்லாஹ்வைத் தவிர உதவி செய்யும் உதவியாளனோ அவனுடைய வேதனையிலிருந்து தடுக்கக்கூடிய பரிந்துரையாளனோ யாரும் அவருக்கு இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் வேதனையிலிருந்து விடுபடுவதற்கு ஈடாக எதையேனும் வழங்கினால் அதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது. மறுமை நாளில், தாங்கள் செய்த பாவங்களின் காரணமாக தன்னை அழிவில் போட்டுக் கொண்டவர்களுக்கு அவர்களது நிராகரிப்பின் காரணமாக கொதிக்கும் நீரும் வேதனைமிக்க தண்டனையும் உண்டு.
info
التفاسير:
这业中每段经文的优越:
• الداعية إلى الله تعالى ليس مسؤولًا عن محاسبة أحد، بل هو مسؤول عن التبليغ والتذكير.
1. எவரையும் விசாரணை செய்வது அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் அழைப்பாளரின் பொறுப்பல்ல. எடுத்துரைப்பதும் அறிவுரை வழங்குவதுமே அவர் மீதுள்ள பொறுப்பாகும். info

• الوعظ من أعظم وسائل إيقاظ الغافلين والمستكبرين.
2. நல்லுபதேசம் மறதியாளர்களையும் கர்வமிக்கவர்களையும் விழிப்பூட்டும் பிரதானமான வழிகளில் ஒன்றாகும். info

• من دلائل التوحيد: أن من لا يملك نفعًا ولا ضرًّا ولا تصرفًا، هو بالضرورة لا يستحق أن يكون إلهًا معبودًا.
3. எவ்விதமான பலனுக்கோ, தீமைக்கோ, இயங்குவதற்கோ உரிமையற்றவர்கள் ஒருபோதும் வணங்கப்படும் இறைவனாக இருக்கத் தகுதியற்றவர்கள் என்பது அல்லாஹ் மட்டுமே வணங்கப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாகும். info