《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
122 : 6

اَوَمَنْ كَانَ مَیْتًا فَاَحْیَیْنٰهُ وَجَعَلْنَا لَهٗ نُوْرًا یَّمْشِیْ بِهٖ فِی النَّاسِ كَمَنْ مَّثَلُهٗ فِی الظُّلُمٰتِ لَیْسَ بِخَارِجٍ مِّنْهَا ؕ— كَذٰلِكَ زُیِّنَ لِلْكٰفِرِیْنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

6.122. அல்லாஹ் நேர்வழிகாட்டுவதற்கு முன்னர் நிராகரிப்பு, அறியாமை, பாவங்கள் ஆகிவற்றால் உயரற்றவர்களாக இருந்து, நம்பிக்கை, கல்வி, வழிப்படுதல் ஆகியவற்றுக்கு வழிகாட்டியதன் மூலம் நாம் உயிர்த்தெழச் செய்தவர்களும், நிராகரிப்பு, அறியாமை, பாவங்கள் என்னும் இருள்களில் சிக்கி வெளியேற முடியாமல் தவிப்பவர்களும் சமமாக முடியுமா? அவர்கள் இருள் சூழ்ந்த பாதைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். இந்த இணைவைப்பாளர்களுக்கு இணைவைப்பும், செத்தவற்றை உண்ணுதலும், உங்களுடன் தவறான முறையில் தர்க்கம்புரிவதும் அழகாகக் காட்டப்பட்டுள்ளது போல நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் செயல்களும் பாவங்களும் அழகாகக் காட்டப்பட்டுள்ளன. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனையைக் கூலியாக வழங்குவதற்கே அவ்வாறு அழகாக்கப்பட்டுள்ளன. info
التفاسير:
这业中每段经文的优越:
• الأصل في الأشياء والأطعمة الإباحة، وأنه إذا لم يرد الشرع بتحريم شيء منها فإنه باق على الإباحة.
1. அனைத்துப் பொருட்களும் உணவுகளும் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவையே. அவற்றில் மார்க்கம் தடைசெய்தவற்றைத் தவிர ஏனையவை அனுமதிக்கப்பட்டதாகவே கருதப்படும். info

• كل من تكلم في الدين بما لا يعلمه، أو دعا الناس إلى شيء لا يعلم أنه حق أو باطل، فهو معتدٍ ظالم لنفسه وللناس، وكذلك كل من أفتى وليس هو بكفء للإفتاء.
2. மார்க்கத்தில் அறியாத விஷயத்தைப் பேசுபவன் அல்லது சத்தியமா அசத்தியமா என அறியாத ஒன்றின் பக்கம் மக்களை அழைப்பவன் வரம்பு மீறியவனாகவும் தன் மீதும் மக்கள் மீதும் அநீதி இழைத்தவனாகவும் கருதப்படுவான். இது மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்கு தகுதியின்றி தீர்ப்பு வழங்குபவருக்கும் பொருந்தும். info

• منفعة المؤمن ليست مقتصرة على نفسه، بل مُتَعدِّية لغيره من الناس.
3.ஒரு நம்பிக்கையாளனின் பயன் அவனோடு மாத்திரம் சுருங்கியதல்ல. மாறாக ஏனைய மனிதர்களுக்கும் அவன் பயனுள்ளவனாவான். info