《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
7 : 57

اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاَنْفِقُوْا مِمَّا جَعَلَكُمْ مُّسْتَخْلَفِیْنَ فِیْهِ ؕ— فَالَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَاَنْفَقُوْا لَهُمْ اَجْرٌ كَبِیْرٌ ۟

57.7. அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைப் பிரதிநிதிகளாக்கிய செல்வங்களை அவன் உங்களுக்கு அளித்த மார்க்கத்தின்படி அதனைக் கையாளுங்கள், செலவு செய்யுங்கள். உங்களில் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு தங்களின் செல்வங்களை அவனுடைய பாதையில் செலவு செய்தவர்களுக்கு அவனிடத்தில் சுவனம் என்னும் மகத்தான கூலி உண்டு. info
التفاسير:
这业中每段经文的优越:
• المال مال الله، والإنسان مُسْتَخْلَف فيه.
1. செல்வம் அல்லாஹ்வுக்குரியது. மனிதன் அதற்கு பிரதிநிதியாகத்தான் ஆக்கப்பட்டுள்ளான். info

• تفاوت درجات المؤمنين بحسب السبق إلى الإيمان وأعمال البر.
2. நம்பிக்கை, நற்செயல்கள் ஆகியவற்றின்பால் முந்துவதற்கேற்ப நம்பிக்கையாளர்களின் படித்தரங்கள் வேறுபடும். info

• الإنفاق في سبيل الله سبب في بركة المال ونمائه.
3. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது செல்வங்களில் பரக்கத்தும் அபிவிருத்தியும் ஏற்படக் காரணமாகும். info